(Reading time: 13 - 25 minutes)

03. நினைத்தாலே  இனிக்கும்... - Prishan

ninaithale Inikkum

ண்களை மூடி படுத்திருந்தாள் நந்திதா..உறக்கம் வர மறுத்தது. அறையின் நிசப்தம் தனிமையை உணர்த்தி, தந்தையின் ஞாபகத்தை அதிகப்படுத்தியது. இதற்கு மேல் இருந்தால் எங்கே அழுதுவிடுவோமோ என்று எழுந்து தன் அறையை பூட்டிக்கொண்டு அடுத்த அறையான அனு,ஆருவின்  அறைக்குச் சென்று கதவைத் தட்டினாள்.ஒரே தட்டலில் திறந்த கதவின் பின் அனு புன்னகையுடன்

" வெல்கம் டியர்...இத நான் அப்பவே எதிர் பார்த்தேன்..." என்றாள்.

நந்து அவளைக் கண்டு கொள்ளாமல் ,வேகமாக சென்று ஆருவை ஒட்டி அமர்ந்து கொண்டாள். அதைப் பார்த்த அனு உதட்டை சுழித்து பழிப்பு காட்டிவிட்டு , பெட்சீட்டை தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு, உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்

"தங்கம்ஸ்...அனுகுட்டிக்கு ரொம்ப டயர்டா இருக்கறதுனால , தூங்கப்போறா..சோ..நோ மோர் டாக்கிங்..கோ டூ ஸ்லீப்..குட் நைட்.." என்றாள்.

"ரொம்ப பேசினா இப்படித்தான் டயர்ட் ஆகி பாட்டரி டவுனாகிடும்.."

நந்து கிண்டலாக சொல்ல முகத்தில் இருந்து மட்டும் பெட்சீட்டை விலக்கி,கண்ணை சுருக்கி

" யு டூ நந்து ...பாத்துக்கறேன்..." என்றவாறு வராத கண்ணீரை ஒற்றைவிரலால் சுண்டி விட்டாள்,

நந்துவும் ஆருவும் வாய்விட்டு சிரிக்கவும், திரும்ப தன் பொசிஷனிற்குள் சென்ற அனுவின் முகமும் மலர்ந்தது..
" காலைல அப்பாகிட்ட பேசிடாலாம் நந்து..அனுகிட்ட மொபைல் இருக்கு..இப்பவே பேசலாம் ஆனா,அப்பா பயந்துப்பார்ல, அதனால நல்லா தூங்கு நாளைக்கு ஃபரெஷ்ஷா அப்பாக்கிட்ட பேசலாம்"  ஆரு கூறியவுடன் காலையில் தந்தையிடம் பேசிவிடலாம் என்ற எண்ணமே சற்று உற்சாகம் தர ஆருவின் கைகளை பிடித்துக்கொண்டே உறங்க முயன்றாள் நந்து. தாயின் அறவணைப்பை சிறு வயதிலேயே இழந்த நந்து, ஆருவின் தோழமையில் அதைக் கண்டாள். தன் தந்தை கற்றுத் தந்ததைப் போல்  நூறு முதல் ஒன்று வறை தலைகீழாக  மனதிற்குள் சொன்னவளை ,இரண்டு நூறுகள் கடந்ததும் உறக்கம் அவளைத் தழுவியது.

ண்களைத் திறந்து பார்த்த பொழுது, இருள் போர்வையை விலக்கி சூரியன் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். கார் மதுரையை தாண்டி திருமங்கலம் ரோட்டில் பயணிப்பதைப் பார்த்தார் பாஸ்கரன். இரவு முழுவதும்  மகளைப் பற்றிய நினைவே அவரை வாட்டியது. மனதில் பல எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தது.. எல்லாம் அவளின் எதிற்காலத்திற்காகத்தான் என்றாலும், மகளை முதன்முறை பிரிந்தது அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நந்து இல்லாத வீட்டிற்கே செல்லப்பிடிக்காதவராய் மனதிற்குள்ளே ஒரு முடிவு எடுத்தவர் .,அதன்படி வீட்டை அடைந்து காரை நிறுத்தியவுடன் டிரைவரை அனுப்பிவிட்டு..உள்ளே சென்றவர் தன் மொபைல் அழைக்கவும் எடுத்துப் பார்த்தார், புதிய எண்ணாய் இருக்கவும் நந்துவாய் இருக்குமோ என்று ஆவலும்,பயமுமாய்  காதில் வைத்தார். நந்து வெகு உற்சாகமாக பேசவும்(ஆருவின் உபயத்தினால்) அவருக்கு மனது நிம்மதி ஆனது. பின்பு அவர் தான் முடிவு செய்த படி கிளம்பி தன் பூர்வீக நிலங்கள் இருக்கும் காரைக்குடிக்கு பஸ்ஸில் சென்றார். பேருந்தில் பல பேருடன் பயணித்தாலும் மனம் மகளையே சுற்றி வந்தது, ஆனால் இந்த முறை அவளின் எதிர்காலத்தைப் பற்றிய சந்தோஷமான கற்பனையில் திளைத்திருந்தது.

" எந்த டிரஸ் போடட்டும் ஆரு?"

இரண்டு டிரஸ் செட்டை கையில்  பிடித்தபடி அனு கேட்க, கிளம்பி ரெடியாய் இருந்த ஆரு பதில் சொல்லாமல் விட மாட்டாள் என்பதால்,

"ரெட் போட்டுக்கோ அனு.." என்றாள்

"ஓ.கே ...நான் கூட அதான் நினைச்சேன்.." என்றபடி கடகடவென கிளம்ப ஆரம்பித்தாள் அனு.அப்போது கதவை தட்டிவிட்டு உள்ள வந்த நந்து

"நல்லாயிருக்கா அனு..?" என்று தான் அணிந்திருந்த டிரஸை காட்டினாள் ( அது அனு ஆல்டர் பண்ணித் தந்த டிரஸ்), திரும்பி பார்த்த அனு

" ஒய்....பட்டிக்காடு,கலக்குற போ.." என்றாள்

"அனு.." என்று சினுங்கிய போதும் முகம் மலர்ந்தது நந்துவிற்கு,

" ஆமா நந்து உனக்கு இந்த ப்ளூ கலர் ரொம்ப நல்லாயிருக்கு..சரி..சரி..breakfastக்கு டைம் ஆச்சு கீழ போகலாம்.." ஆரு அழைக்க மூன்று பேரும் கீழே இறங்கினர்.

( நம்ம  வாழ்க்கையில் ஒரு ரீவைன்ட் பட்டன் இருந்தால் கண்டிப்பா நாம எல்லோரும் திரும்பபோக ஆசைப்படுறது காலேஜ் life-ஆ தான் இருக்கும் இல்லையா..அந்த காலேஜ் வாழ்க்கையின் முதல் நாளிற்குள் நந்து,அனு,ஆரு எல்லோரும் அடி எடுத்துவைத்தனர்.)

முதல் நாள் என்பதால் classes  எதுவும் இல்லை. புக்ஸ், இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் எல்லாம் ஆபிஸ் ரூமில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு நோட்டிஸ்போர்டில் சொல்லியிருந்தார்கள்., அதனால்  சிறு சிறு பிரிவாக ஃபஸ்ட் இயர் ஸ்டூடன்ஸ் எல்லோரும் அங்கங்கே மரத்தடியில், கேன்டினுள் என்று அமர்ந்திருந்தனர். உள்ளே நுழைந்ததுமே அனு, ஆரு இருவரையும் ஆபிஸில் கூப்பிடுவதாய் ப்யூன் வந்து அழைக்கவும், ஆரு நந்துவிடம்

" நீ போய் சுஜா, காவ்யா எல்லாம் இருக்காங்கல்ல, அங்க வெய்ட் பண்ணுடா...நாங்க என்னன்னு கேட்டுட்டு வந்திடரோம்.." என கூறிவிட்டு சிறிது தூரம் சென்றவள், திரும்பி வந்து சீனியர்ஸ் அமர்ந்திருந்த பக்கம் கையை காட்டி

" அந்தப் பக்கம் போக வேண்டாம்" என்றுவிட்டு போனாள்.

நந்துவும் சுஜாவின் அருகில் போனாள், அவள் வெகு சுவாரஸ்யமாக தன் தோழியுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவளை டிஸ்டர்ப் செய்யாமல் பக்கத்தில் தனியாக அமர்ந்திருந்த பெண்ணின் அருகில் சென்று அமர்ந்தாள். bagஐ குடைந்து கொண்டிருந்த அவள் நிமிர்ந்து நந்துவைப் பார்த்து புன்னகைத்து,

"ஹாய் " என்றாள்.

நந்துவும்  புன்னகைக்கவும். 

" நான் ஜெனி..டேஸ் காலர்.. நீ ஹாஸ்டல் தான... நம்ம i.d கார்ட் எல்லாம் என்கிட்ட தான் இருக்கு..உன்பேர் சொல்லு,எடுத்து தரேன்.." என்றாள்

"நந்திதா பாஸ்கரன்" எனவும் , அந்த பேருடைய i.dயை தேடி எடுத்த ஜெனி

"இன்னும் tag வரலை, அதனால இந்த பின்ல மாட்டிக்கோ " என்று கொடுத்தாள். நந்துவும் தனது கோட்டில் அதை மாட்டிக்கொண்டு ஜெனியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் நந்துவின் முகத்தில் நிழலாட, நிமிர்ந்து பார்த்தவளின் முன்னே சற்றே ஒல்லியாய், வளர்த்தியாய் ஒருவன் நின்றிருந்தான்.

முகத்தில் தயக்கத்துடன் "உன்ன சார் கூப்பிடுறார், என் கூட வா" என்றான்.

"என்னையா..?யார்..?" சந்தேகத்துடன் கேட்டவாரே ஜெனியைப் பார்ததாள். ஜெனி நின்றவனின் பின்னால் எட்டிப் பார்த்துவிட்டு கண்களாலயே போகாதே என்றாள்.நந்து என்ன செய்வது என்று குழம்ப., அதற்குள் அருகில் நின்றவன் பின்னால்திரும்பி பார்த்து விட்டு,

" ப்ளீஸ் ...சீக்கிரம் வா, இல்லைனா பிரச்சனையாகிடும்" என்றான்.

அவன் 'சார்' என்றது நினைவு வர ,புரொபசர் தான் அழைக்கிறாரோ என்று நந்து அவனுடன் சென்றாள். ஒன்றும் செய்ய முடியாமல் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள்  ஜெனி.

புரபொசர்தான் அழைக்கிறார் என்று நினைத்து வந்த நந்து அங்கு ஒரு ஸ்டூடன்டை கண்டவுடன் அதிர்ந்தாள்.
" அதான் சொன்ன வேலையை செஞ்சாச்சுல்ல , நீ கிளம்பு.. " என்றான் அந்த புதியவன் அவளை அழைத்து வந்தவனைப்பார்த்து ,அவன் திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றான். புதியவன் நந்துவை குறு குறு வென பார்தான். அவன் பார்வை எங்கெங்கோ செல்வதைக் கண்டு நந்துவிற்குள் எச்சரிக்கை மணி அடித்தது (அட, நந்துவுக்கே புரிஞ்சிருச்சிருச்சே..) பல்லைக்கடித்துக் கொண்டு எப்படி இங்க இருந்து தப்பிப்பது என்று நினைத்தாள்.

" அழகா இருந்தா எங்களை எல்லாம் மீட் பண்ணிதான் ஆகனும்..தப்பிக்கல்லாம் முடியாது என்ன...அப்றம் நான் உன்னோட சூப்பர் சீனியர்.( காலேஜில் immediates என்றால் 2nd year, seniors -3rd year, super senior- final year, அப்றமா housesurgeons.. ஓ.கேவா frnds)  நாளைக்கு வரப்போ என்னோட பேர தெரிஞ்சிட்டு வா.. அப்பறம் டெய்லி காலைல வந்து எங்களுக்கு குட் மார்னிங் சொல்லிட்டுத்தான் classக்கு போகனும்..இப்போ உன் பேர், ஃபுல் பயோடேட்டா சொல்லு.." என்றான், அதற்குள் பக்கத்தில் நின்றிருந்தவன்

"அதான் பாப்பா ஐ.டி போட்டு இருக்கில்ல மச்சான் அத பார்த்தா தெரியப்போது" என்றவுடன்

"ஆமால்ல" என்றபடி ஒரு மாதிரி சிரிப்புடன் ஐ.டியை எடுப்பதற்காக கையை முன்னாள் நீட்ட, நந்து பதறி அனிச்சையாய்  இரண்டடி பின்னால் வந்தாள்.,வந்தவள் எதன் மேலோ இடித்து நின்றாள். அவளை விழாமல் பிடித்த கைகள் அதே வேகத்தில் அவளை ஒதுக்கி தள்ளியது. அவனைப் பார்த்த அந்த சூப்பர் சீனியரின் முகம் சுருங்க அந்த இடத்தை விட்டு வேகமாய் அகன்றான்.

அவன் அகன்றதும் கொஞ்சம் ஆசுவாசமாய் அருகில் நின்றவனைப் பார்த்தவள் அதிர்ந்தாள்..ஏனென்றால் அவன் முகத்தில் சிறிது கூட இளக்கம் இல்லை, முழு வெறுப்பு நிறைந்திருந்தது. வார்த்தைகள் சுள்ளென்று வந்து விழுந்தது.

" அறிவில்லை.. ஒருத்தன் என்ன intentionல உன்ன பாக்கறான் கூட தெரியாது... மரம் மாதிரி நிக்கற..சை..நீ எல்லாம் டென்டிஸ்ட் ஆகி என்னத்த கிழிக்கப்போற.."

இன்னம் ஏதோ சொல்லவந்தவன் பல்லைகடித்து நிறுத்தி.. எப்படியோ போ என்பது போல் பார்த்து விட்டு அருகில் நின்றவனிடம்

" இனிமே இது மாதிரி ஹெல்ப் கேட்டு வராத..."என்று உறுமி விட்டு வேக நடையுடன் சென்று மறைந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.