(Reading time: 7 - 14 minutes)

09. நினைக்காத நாளில்லை ரதியே - ஸ்வேதா 

Ninaikkaatha Naalillai rathiye

ராய்சிக்காக அந்த கம்பனி ஜி.எம் உடன் அவர் கருநீல பென்ஸ் காரில் பயணம் செய்துகொண்டிருந்தாள் மீரா. வழிசலை பொறுத்துக்கொண்டு . முப்பது வயதுக்குள் தான் இருக்கும் அவருக்கு பெயர் கமலேஷ். குஜராத் மாநிலம் பூர்விகமாம். "பார்ன் வித் சில்வர் ஸ்பூன் ரகம்."

 

"உங்க கிட்ட குஜராத்தி ஸ்டைல் தெரியுதே "

 

"ஆமாம் என் ஆன்டி குஜராத்தி"

 

"ஆன்டி என்றால்?"

 

பார்வை திருப்பி பார்த்துவிட்டு பதில் பேசவில்லை.என்னவோ இப்படி துருவி துருவி கேட்போரை பிடிப்பதே இல்லை மீராவிற்கு.அவள் பார்வையில் என்ன கண்டானோ கமலேஷ் பேச்சை நிறுத்திக்கொண்டான்.

 

தொழில் முனைவு திறன் பற்றி உரையாற்ற வந்தவன் ப்ரெசென்டேசனில் அவள் யோசித்து வைத்திருந்த பாய்லர் டிசைன் செய்து அவன் விற்பதை பற்றி சொல்லவும் பிடித்துக்கொண்டு அவனோடு அவன் கம்பனிக்கு வந்துவிட்டாள்.

 

அந்த சின்ன கம்பனியில் டிசைன்  இன்ஜினியர் என்றவனை காட்டியதும்.கண்கள் கறீத்தது மீராவிற்கு. இது என்ன பின்னல்?எங்கே ஆரம்பம்? அங்கே சென்று  விடிவித்துகொண்டு வந்து விடலாமே என்றிருந்தது மீராவிற்கு. எங்கேப்போனாலும் அதே இடத்தில் வந்து சேர்கிறதே!! 

 

"மகேந்திரன், உங்க அந்த  ஸ்பெஷல் டிசைன்ல இவங்களுக்கு இன்டெர்ஸ்ட், ஏதோ உதவி வேண்டும் என்றால் செய்ங்க.."

 

மீரா பக்கம் திரும்பி 

 

"இந்த டிசைன்னால  எங்களுக்கு கவர்மெண்ட் ப்ராஜெக்ட் கிடைக்க போகுது மீரா அண்ட் கிரெடிட்ஸ் கோஸ் டு மகேந்திரன் " என்றான் கமலேஷ் 

 

பின்  அவன் அறைக்கு சென்ற பின் 

 

"இந்த மாதிரி செய்றதுக்கு பெயர் தெரியுமா மிஸ்டர் மகேந்திரன்"

மஹி பேசவேயில்லை 

 

"ப்லாகரிஸ்ட்!!!" 

 

"இது என்னோட டிசைன்.."

 

"ஆமாம் மீரா கண்டிப்பா.."

 

"உன் கற்பனைக்கு நான் உருவம் கொடுத்திருக்கிறேன், சோ நம்ப கண்டபிடிப்பு சொல்லிக்கலாம்!!" குறும்பாக சொன்னான் மஹி முறைத்து பார்த்தாள் மீரா.

 

"உனக்கு முறைக்கவே வரலடா தங்கம்" என்று நெருங்கி அவள் தாடையை நோக்கி கைகளை உயர்த்த மீரா பின் நோக்கி சென்றாள்.

 

"டேய் மச்சி.." அன்று அந்த நேரம் உள்ளே வந்தான் பிரதாப் 

 

"என்னடா பன்ற??? மீரா நல்லவேளை நான் வந்து காப்பாற்றி விட்டேன்.." என்று  கிண்டலாக சொன்னான்.

 

"ஹாய், பிரதாப் இங்கே தான் நீயும் வேலை பார்கிராயா?" ஏதோ இன்னொரு துணை கிடைத்த தொனியில் மீரா சொன்னாள்.

 

"ஆமாம் மீரா அவன் டிசைன் நான் டெஸ்டிங் " பிரதாப் பேச்சு வளர்ந்துக்கொண்டே இருந்தது. எப்பவும் போல் மீரா மஹியை தவிர்த்து பிரதாபிடமே பேச மஹி பிரதாப்பை செய்கையில் வெளியே போக சொன்னான். உடனே வேலை இருபதுப்போல் பிரதாப்பும் 

 

"எனக்கு வேலை இருக்கு நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டு கழன்றான்.

 

தனியாக திரும்பவும் இவனிடமா?ஐயோ என்றது மீரா உள்ளம்.

 

"கடவுளே அவ மனசுல என்ன இருக்கு படிக்கிற அந்த சக்தியை கொடு எனக்கு" என்று வேண்டிகொண்டிருந்தான் மஹி.

 

ஹியே முயற்சி எடுத்து மீராவின் ப்ராஜெக்ட் பற்றி பேச ஆரம்பித்தான்.பின் பேச்சு வளர்ந்தது சென்றுக்கொண்டே இருந்தது ஆனால் விலகல் புரிந்தது. அதை கண்டும் காணாமல் இருந்தான் மஹி. நடுவில் கமலேஷ் வந்து சேர்ந்தான். அவன் மீராவின் பின்புலத்தை தெரிந்துக்கொள்ள முயற்சித்துகொண்டிருந்தான். மஹிக்கு ஆத்திரத்தை சொல்ல முடியவில்லை. கமலேஷ் கொஞ்சம் வழியும் ரகம். மீரா வெட்டும் ரகம் தான். வழியாதே என்பதுப்போல் தான் பேசிக்கொண்டிருந்தாள்.

 

கிருஷ்ணாவின் நினைவு தான் வந்தது மஹிக்கு.அவனுக்கு யாராவது மீராவிடம் அதிகமாக பேசினாலே பிடிக்காது. அந்த கோபத்தை அப்படியே மறைக்காமல் அவளிடம் காட்டுவான். ஆனால் மீரா அதை பெரிதுப்படுத்த மாட்டாள்,அவளுக்கு அவன் மேல் கோபமே வராது வந்தால் வாய் பேசாது கை தான் பேசும்.

கமலேஷ் அவன் அடுத்த தூண்டிலை போட்டான்.

 

"வாங்க என் கார்லே போயிரலாம்"

 

"இல்லை, மகேந்திரன் என் ப்ரெண்ட் தான்,அவன் கூட போய்க்கிறேன் உங்களுக்கு எதுக்கு கஷ்டம்" முடிப்பதுபோல் பேசினாள் மீரா.

 

மஹிக்கு  மகழ்ச்சி தாளவில்லை. வெளியே வந்தப்பின் "இந்த இண்டஸ்ட்ரியல் ஏரியா என்ட்ரன்ஸ்ல் இறக்கி விட்டுடுங்க மகேந்திரன் நான் போய்க்கிறேன்" - மீரா.

 

 

"சரீங்க மீரா" என்றானே தவீர அவள் காலேஜில் இருக்கும் வண்டியை எடுக்க சொல்லி அவளை முன்னே விட்டு  பின்னே சென்றான்.

 

"வேண்டாம், நான் போய்கொள்வேன்" 

 

"போவீங்க.. போவீங்க.. ஆனால் எங்காவது விழுந்து வெச்சா??, என் தோழி மேலே எனக்கு அக்கறை இருக்கே!!”

 

மண்டைக்குள்ளே பல்பு எரிந்தது, அப்போ இவன் தான் அன்று காப்பற்றினான்!!

அவள் எண்ண ஓட்டம் புரிந்து வேண்டுமென்றே குழப்ப "வண்டி ஓட்டும் போது வேற எங்கும் கவனம் போக கூடாது மிஸ் மீரா"பதில் கொடுக்கிறானாம் அவள் சொன்ன "மிஸ்டர்"க்கு. 

 

மீராவின் மனம் முழுக்க ஆராய்ச்சி, கவி கிருஷ்ணா காதல், அடுத்து செய்ய போகும் பிஎச்டி என்றே நிறைந்து இருந்ததால் மஹி செயல்களை ஆராய தோன்றவில்லை,அப்படி பார்த்தாலும் அந்த வயதில் பெண்களிடம் வார்த்தையில் உல்லாசம் தேடும் பாவனை தான் அவனுக்கு. மீராவின் பலவீனத்தை பயன்ப்படுத்திகொள்கிறான் அவன் சுகத்திற்காக  என்று தோன்றியது.

 

“அவனால் ஏற்கனவே நாட்களை வீணடித்து விட்டாய் மீரா. மீண்டுவா திரும்ப போய் விழாதே சேற்றில்” என்று மனம் எச்சரித்தது. மனித மனம் விசித்ரம் நிறைந்தது. சரியாக தவறு செய்யும், பின் தப்பாக சரியானதை கைவிடும். சிக்கல்களை அதிகமாக யோசித்தே பிண்ணிவிடும்.

கிருஷ்ணாவிற்கு நல்ல படியாக எம்.எஸ் டிகிரி கிடைத்துவிட்டது. கவியிடமும் அவன் காதல் வசனங்களுக்கு நல்ல எதிர்வினை இருந்தது. மொத்தத்தில் சுகம் நிறைந்திருந்தது. அந்த  நேரம் அவன் அம்மா நபிலாவிடம் இருந்து போன் வந்தது 

 

" க்ரிஷி குட்டி மீரா எப்படிமா இருக்கா??, கவி என்ன சொன்னா, நீ நல்லா இருக்க தானே பேட்டு"

எப்பவும் போல் கோபம் வரவில்லை.சிரிப்பு தான் வந்தது கிருஷ்ணாவிற்கு அவன் அம்மாவின் அக்கறையில். இது கடந்த இருபத்தி மூன்று வருடமாகவே ஏற்படும் எரிச்சல். நபிலாவிற்கு  கிருஷ்ணா விட மீரா தான் முக்கியம்.இது கிருஷ்ணாவின் கருத்து. கேட்டால் அவள் பெண் பிள்ளையாம். 

 நபிலா குஜராத்தி.  வேலை பார்க்கவென்று அங்கே போன விஸ்வநாதன் நபீலாவை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். அவர் மேலிருந்த காதல் நபீலாவிற்கு தமிழ் மொழி முதல் சமையல் வரை பழக்கி விட்டது. கர்பமாக இருக்கும் போது பெண்பிள்ளை எதிர்பார்த்தாராம் நபீலா ஆண் குழந்தை கிருஷ்ணா பிறந்து விட்டானாம்.  நண்பன் வாசுவின் பெண்ணை நம் பெண்ணாக நினைப்போம் என்று அவர் தேற்ற, என் பொண்ணு உனக்கும் பொண்ணு தான் என்று வாசுதேவன் சந்திரா தம்பதியனர் தேற்ற அன்று விழுந்த விதை.வதைந்தது கிருஷ்ணா தான். என் அம்மா எனக்கு மட்டும் தான் என்ற சுயநலம் அவனை வதைத்து.அதனால் தான் என்னமோ மீரா எது செய்தாலும் மற்றவர் புகழ்ந்தால் இவனுக்கு எரிச்சல் வரும்.

சில சமயம் வெறுத்தே போகும் நபீலா மீரா மேல் காட்டும் அக்கறையில். அதற்க்கு ஈடாக சந்திரா கிருஷ்ணா மேல் பாச மழை பொழிவாள்.இரண்டு தலைமுறை நட்பு.

வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு நபீலா போன் வைத்த பின் இன்னொரு கால் வந்தது இந்தியாவிலிருந்து 

"ஹலோ ஏம் ஐ ஸ்பீகிங் டு கிருஷ்ணா"

கேட்டவுடன் தானாக கூவினான் "மஹி..." என்று 

மனிப்பு என்று ஆராம்பித்து விசாரணை என்று சென்று உதவி என்று கடந்து திட்டம் உதித்தது இருவருக்குள்.சிறுபிள்ளை தனம் என்று இருவரும் செய்த செயல்கள் எல்லாம் பேசி சிரித்து மகிழ்ந்தனர். 

 

சைக்ரியாடிஸ்ட் ராம் பிடித்து அவனிடம் விசாரித்து பல துப்பறியும் சாம்பு போல் வேலை செய்து  விவரங்களை சேகரித்து.தோழிகளின் எண்ணங்களை மாற்ற சொல்லி கேட்டுக்கொண்டு,கிருஷ்ணாவின் போன் நம்பர் வாங்கி பேசிவிட்ட பின் தான் மூச்சு விட்டான் மகேந்திரன்.

 

இப்படி தான் வாழ்கை போகும் என்று எண்ணத்தோடு செயல்படுவோம் சட்டென கடலில் சூறாவளியில்  திசை மாறும் படகை போல் வாழ்கை படகு திசை மாறும். மாற்றங்களும் எதார்த்தமும் புரிவதுக்குள் சூழ்நிலை மாறிவிட்டிருக்கும். அப்படி தான் மஹியின் வாழ்வும்.

 

மீரா காதல் சொன்ன போது கிருஷ்ணா மேல் இருந்த எரிச்சல் திசை மாறி அவள் மேல் பாய்ந்ததற்க்கு எதை யாரை நொந்துக்கொள்வது. அந்த கல்லூரியில் சங்கடமான ஒரு விஷயம் உண்டு. அது பொருளாதார நிலை வைத்து ஒருவரை ஒருவர் நிர்மாணிப்பது. கிருஷ்ணாவின் தந்தையும் தொழிலதிபர் தான். ஆனால் அவன் பணகாரன் என்று கட்டிக்கொள்ள மாட்டான். அப்படி பட்ட சூழ்நிலையில் வளர்க்க பட்டிருந்தான்.மீராவுடனான பழக்கமும் காரணமாக இருக்கலம்.அவள் பணம், பொருள், பெருமை என்பதை விட மனிதநேயம், சமத்துவம் பற்றி அதிகமாக பேசுபவள். 

அவன் அப்படி தன் அப்பாவின் நிலைமையை கிண்டல் செய்ததும் அந்த சங்கடத்தில் தான் தன்னை மீறி ஆத்திரத்தில் அடித்து விட்டான். அதற்க்கு பின் மன்னிப்பு கேட்கும் படி சூழ்நிலை அமையவில்லை. பரீட்சை நேரத்தில் மோசமான நிலை மருத்துவமனையில்  அதனால் பரிட்சையும் எழுதவில்லை. அதற்க்கு பின் அர்ரியர் எழுதி தான் பாஸ் செய்தான். பட்டமளிப்பு விழாவில் ஒரு செமஸ்டர் எழுதாததால் தங்கமெடல் கிடைக்காது அதனால் அதையும் தவிர்த்து விட்டான்.  

 

தொடரும்

Go to Ninaikkatha naal illai rathiye 08

Go to Ninaikkatha naal illai rathiye 10

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.