(Reading time: 13 - 25 minutes)

ரு நிமிடம் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தாள் நந்து..இப்படி ஒரு தாக்குதலை அவள் எதிர்பார்க்கவே இல்லை., சுற்றிலும் பலபேர் தன்னைப் பார்ப்பதைக் கண்டு அவமானமாய் இருந்தது. கண்களில் கண்ணீர், குளம்  கட்டியது. கண்களைத் துடைத்தவாரே அங்கிருந்து வேகமாக நடந்தாள்.

அவள் பின்னாலயே வந்தவன்,

“ஹேய், ஸாரிப்பா...ரொம்ப ஸாரி, சீனியர்ஸ் சொல்றப்போ வேற ஒன்னும் பண்ணமுடியாது..அதுவும் அந்த ப்ரேம் இருக்கானே,சரியான சைக்கோ ( சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்)..அவன் இப்படி ஏதாவது செய்வான்னுதான் சந்துரு சார்க்கிட்ட ஹெல்ப் கேட்டேன், ஆனா அவர் இந்த மாதிரி பேசுவார்னு தெரியாதுப்பா..ப்ளீஸ் வருத்தப்படாத, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..” என்று மன்றாடிக்கொண்டிருந்தான். அது வரை எல்லாம் உன்னால் தானே என்பது போல்,அவனைக் கண்டுகொள்ளாமல் இருந்தவள்..அவன் நிஜமாகவே வருத்தப்படுவது கண்டு..

“ஒன்னுமில்ல விடு...” என்றாள்.

ஆனால் மனம் தெளியவில்லை,ப்ரேமின் செய்கை அருவருப்பாய் இருந்தது என்றால், சந்துருவின் வார்த்தைகள் அவளை குறுகச்செய்தது..இப்படியும் ஒருவரை வார்த்தைகளால் வலிக்கச் செய்யமுடியும் என்று இப்பொழுதான் அறிந்து கொண்டாள். இது வரை அவளைப் பார்த்து யாரும் முகம் சுழித்தது கூட கிடையாது, அவள் அது மாதிரி நடந்துகொண்டதும் கிடையாது. சீனியர்ஸ் என்றாலே பயமாக இருந்தது..எப்படி இங்கு ஐந்து வருடம் படிக்கப் போகிறோம் என்று ஆயாசமாய்  இருந்தது. தன் அப்பாவின் ஞாபகம் வந்தது, இது போன்ற சூழ்நிலையையெல்லாம் சமாளித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தானே இவ்வளவு தூரம் தள்ளி அனுப்பியுள்ளார்..அதையெல்லாம் நினைத்துப்பார்க்கையில் கொஞ்சம் திடம் வந்தது. முகத்தை அழுந்த துடைத்து, நிகழ்ந்ததையெல்லாம் சேர்த்து துடைக்க முயன்றாள்.

ன்னை  நோக்கி வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, வேகமாக முன்னாள் வந்து
“ என்னாச்சு..? ஏன் நந்து முகம் இப்படி இருக்கு ,அந்த சீனியர் என்ன சொன்னார்..?”மூச்சு விடாமல் கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனாள் ஜெனி. நந்து பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கவும்,

“ஹே ரிலாக்ஸ்...ஒன்னும் இல்ல, எல்லாம் அந்த ப்ரேம்னால வந்தது...சந்துரு சார் தப்பா நினைச்சுட்டார்..ப்ளீஸ் பெரிசுபடுத்தாத..பை த வே ஐம் கவின்..யு ஆர்?” என்று கேட்கவும், ஜெனி கோபமாக  பார்க்கவும்

“ ராங்க் டைமிங்க்-ல...சாரி...ஆனா இந்த ஜெனி பொண்ணூ யாருன்னு தெரியுமா..? எல்லாரோட ஐ.டி கார்டும் அதுக்கிட்ட தான் இருக்காம்..எங்க போச்சுன்னே தெரில...ஒரு பொறுப்பு வேணாம்..” என்று பொரிந்து தள்ள, ஜெனி நிதானமாக தன் bagல் இருந்து ஐ.டியை எடுத்துக்கொடுத்தாள்..கவின் முழித்த முழியை பார்த்து நந்துவிற்கே சிரிப்பு வந்தது.

“ஹி..ஹி.. நீ தான் அந்த ஜெனியா? சொல்லவே இல்லை..” எனவும் ஜெனி சண்டை போட ரெடியாக...அவனை காப்பாற்றுவது போல் அனுவும், ஆருவும் அங்கு வந்தனர்..புதிதாக அவனைப் பார்த்த அனு

” ஏய்.. யார் நீ... நந்துவ என்ன பண்ண...?” என்று கேட்கவும்

“ஐயையோ.... மொதல்லேர்ந்தா...?” என்று அலறியவனை பார்த்து, ஜெனி அனுவிடம் ஏதோ கூற ‘இது ஏன் அது காதை கடிக்கிது..?’ என்று நினைத்தவன், அந்த மூன்று பேரில் கொஞ்சம் அமைதியாக தெரிந்த ஆருவை

“ஒரு நிமிஷம் “ என்று தனியாக அழைத்து நடந்தவற்றைக் கூறினான். பின்பு

“திரும்ப திரும்ப கேட்டு அவளுக்கு ஞாபகப்படுத்த வேண்டாம்..ரொம்ப இன்னொசென்டா இருக்கா. அந்த ப்ரேம் girls விஷயத்தில் ரொம்ப மோசம்னு சொன்னாங்க..அதனால கொஞ்சம் பத்ரமா பாத்துக்கோ..” என்றான். ஆருவும் புரிந்துகொண்டு “சரி” என்றாள். திரும்பி நந்துவிடம் சென்றார்கள்.

கவினிடம் ஏதோ கேட்க வாயெடுத்த அனுவின் கைகளை, நந்து அறியாமல் அழுத்திய ஆரு வேண்டாம் என ஜாடைக் காட்டினாள்.ஆரு நந்துவின் தோளில் கைப்போட்டு “ஒன்னுமில்லடா, நாங்கள்லாம் இருக்கோம்ல...தைரியமா இருக்கனும்” என்றாள். நந்து சரி என தலை ஆட்டவும், சுழ்நிலையை மாற்றுவதற்காக “நீ.....” என்றபடி அவன் ஐ.டியை உற்றுப்பார்த்துவிட்டு

“கவின்-அ...ஒ.கே....நீ மட்டும் நிக்கிற, உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எங்க..?” என கேட்டாள் அனு.

“ எல்லாரும் ஆபிஸ் வரைக்கும் போயிருக்காங்க...”என்றான்.

“ஓ...அங்க இருந்த வானரம் எல்லாம் உன் ஃப்ரெண்ட்ஸ் தானா..?” வேண்டும் என்றே நக்கலுடன் அனு கேட்க,

கவின் அலட்டிக்கொள்ளாமல் “ ஆமாங்க மேடம்...நீங்களும் அவங்க மாதிரியே இருக்கிறதுனால, நீங்க கூட எங்க ஜோதியில் ஐக்கியமாகலாமுங்க” என்றான் போலிப் பணிவுடன் கைகளை  கட்டியபடி.

“டேய்.. வேண்டாம்...அப்ப என்ன மங்க்கினு சொல்றியா...?” என்றபடி சண்டைக்குத் தயாரானவளை...சுவாரஸ்யமாக பார்த்தான் கவின் “சே..சே..உன்னப் போய் அப்படி சொல்வேனா, நீ ஒரு ‘அழகான’ மங்க்கி.....எங்கம்மா கூட எனக்கு ஒரு அழகான மங்க்கி தான் wife-அ வாய்க்கும்னு சொல்லுச்சு”என்றான்.

அவன் பார்வை மாறியதைக் கண்ட அனு” டேய் ..விட்டா ‘கண்டதும் காதல்’னு சொல்வ போல.. அப்படி ஏதாவது உளறுன...மவனே....”என்று நிஜ அவதாரமாக மாறி மிறட்ட...உடனே கட்சி மாறியவன்.”உன்ன யார் சொன்னா.. நான் ‘ஜெனி’யல்ல சொன்னேன்..” என்று ஜெனியை காதலுடன் பார்க்க,ஜெனி ” கொன்னுடுவேன் ” என்று மிரட்ட...”வேணான்னா போ....எனக்காக என் அத்தை மக ‘அருக்கானி’ வெய்டிங்க்..அவ முன்னாடி நீங்களாம் ஜுஜுபி..” என்று தோல்வியையும் வெற்றிகரமாக சமாளித்ததைப் பார்த்து அங்கு ஒரு சிரிப்பலை உருவானது..

(இங்க கவின் பத்தி சொல்லியே ஆகனும்...கோயமுத்தூர்க்காரன், அதுனால அந்த குசும்பு கொஞ்சம் ஜாஸ்தி..மத்தபடி ரொம்ப நல்லவன்ங்க, எவ்வளவு இருக்கமான சுழ்நிலையையும் தன்னோட பேச்சால் லேசாக்கிருவான், ஃப்ரெண்ட்ஸ்க்காக என்ன வேணா செய்வான். ( குடுத்த காசுக்கு ரொம்பவே சொல்லிடேன்பா கவினு))

லகலப்பாய் பேசிக்கொண்டிருந்தவர்களை அணுகிய அந்த அட்டென்டர் “ நீங்களாம் ஃப்ஸ்ட் இயர் தான.. உங்களுக்கு அனாடமி க்ளாஸ் இருக்கு..விசிடிங் ப்ரொஃபசர் வந்திருக்கார்.. ரெண்டாவது பில்டிங்,lab நம்பர்-8. சீக்கிறம் போங்க சார் வெய்ட் பண்ணறார்” என்றுவிட்டு அடுத்த குழுவத் தேடி சென்றார்.

lab-ஐ தேடி அடைந்தவர்கள்.. அங்கு 'anatomy lab ‘ என்று பெரிதாக போர்ட் இருந்ததைப் பார்த்து உற்சாகமாக உள்ளே நுழைந்தனர். உள்ளே நுழைந்தவுடன் இருந்த ஹால் முழுவதும் specimens இருந்தது, அதைப் பார்த்தபடியே மூடியிருந்த கண்ணாடி கதவைத் திறந்து உள்ளே போனார்கள். கதவைத் திறந்தவுடன், formalin ஸ்மெல் குப்பென நாசியை நிறைத்து நந்துவிற்கு வயிற்றை பிசைந்தது..அனு படு உற்சாகமாக “அப்பாடி ,பல நாள் கனவு நிஜமாக போகுது...எத்தன frogஐ dissect பண்ணி டார்ச்சர் பண்ணிருப்பேன்..இப்ப நிஜ கெடாவரை dissect பண்ண போறேன்..” என்றாள்.’ கெடாவரா..?’ திகைத்துப்போய் அனுவைப் பார்த்தாள் நந்து, அனுவின் பார்வை ரசனையுடன் வேறெங்கோ இருக்க, அவளும் அங்கு பார்த்தாள்.

அங்கங்கே சில மாணவர்கள், பல காலியான chairs, முன்னாடி கோட் அணிந்த ப்ரொஃபசர் மும்முரமாக ஏதோ எழுதிக் கொண்டிருக்க, அவரைத் தாண்டி இருந்த நீண்ட டேபிளில் அக்கடா என படுத்திருந்தது கெடாவரே தான்..பார்த்த போதே நந்துவிற்கு கண்ணைக் கட்டியது.இரண்டாம் முறையாக அதிர்ச்சியை தாங்க முடியாமல் கால்கள் தொய்ய மயங்கி சரிந்தாள். ‘நந்து’ என்று நண்பர்களின் குரல் காதில் தேய்ந்து மறைந்தது.

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 02

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 04

நினைவுகள் தொடரும்...  

 

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.