(Reading time: 7 - 14 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“அதெல்லாம் நான் மேனேஜ் செய்துப்பேன். டோன்ட் வொர்ரி சக்தி!”

  

🌼🌸❀✿🌷

   

த்யாவை அவள் வீட்டில் இறக்கி விட்டு விட்டு, தன் இருப்பிடம் சென்றாள் சக்தி.

  

தன்னிடம் இருந்த சாவியை வைத்து கதவை திறந்துக் கொண்டு நேராக அவள் தங்கி இருக்கும் அறைக்கு சென்றாள்.

  

அங்கிருந்த சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள். கண்களை மூடிக் கொண்டாள்!

  

என்னவோ ஒன்று சரியில்லை என்று அவளுடைய மண்டையைக் குடைந்தது!!

  

அஹல்யா குறித்து தெரிந்த விபரங்களை மனதுக்குள் ரீவைன்ட் செய்துப் பார்த்தாள்.

  

அஹல்யா ஏன் தனியாக இந்த ஊருக்கு வந்தாள்? அவளுடைய சொந்த ஊர் எது? ஏன் அதை பற்றி பேச தயங்குகிறாள்?

  

அந்த மொட்டைக் கடிதாசிகளுக்கு பின்னே இருப்பது யார்???

  

சேகரன் பற்றி தெரிந்தவர்கள் யாரோ அனுப்பியதா அல்லது கொலை செய்தவன் அனுப்பியதா? அப்படி கொலை செய்தவன் மூடி போயிருக்கும் கேஸை மீண்டும் தோண்ட வைக்க நினைப்பானா???

  

சேகரன் மரணம் கொலையா விபத்தா???

  

டப் டப் என என்னவோ சத்தம் கேட்டது!

  

சக்தி அதைப் பற்றி கவலைப் படாமல் தன் யோசனையை தொடர்ந்தாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.