“இல்லை சக்தி. தேன் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து தங்க சொல்றாருன்னா சந்தேக லிஸ்ட்ல இருக்க ஆளா இருக்க வாய்ப்பே இல்லை. 1% சந்தேகம் இருந்தா கூட அவர் எங்க வீடு பக்கம் சாந்ததுரையை கூட்டிட்டு வந்திருக்க மாட்டார். ஆனால் பதினஞ்சு வருஷமா இவன் எங்கே போனான்? என்ன நடந்துச்சுன்னு தெரியாம, எனக்கு மண்டையை பிளக்குது. அவர் கிட்ட கேட்டா சொல்ல மாட்டார், சாந்ததுரை கிட்ட சான்ஸ் கிடைக்கும் போது கேட்கனும்!”
‘உன் கிட்ட போய் கேட்டேனே,’ என்பது போன்ற பார்வை ஒன்றை பார்த்த சக்தி, அதற்கு மேல் அந்த தலைப்பில் பேச வில்லை.
🌼🌸❀✿🌷
சேகரனின் வீடு சிறியதாக இருந்தது. டிவி பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய அம்மா சதம் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.
“எப்படிம்மா இருக்கீங்க? உங்க மகன் இறந்துட்டாருன்னு கேள்விப்பட்டோம். வருத்தத்துல இருக்கவங்களுக்கு உதவுறதுக்காக தான் நாங்க இருக்கோம்.” சக்தி அமைதியாக சொன்னாள்.
“நான் எதுக்கு வருத்தப்படுறேன்! அவன் போய் தொலைஞ்சதே போதும். உருப்படாதவன். எப்போ பாரு குடிச்சுட்டு கண்ணு மண்ணு தெரியாம அடிப்பான். கடன்காரன். அவனுக்கு அப்புறம் எனக்கு ஒரு வேலை, அவனோட பணம்னு வந்து இப்போ எங்க வாழ்க்கை முன்னேறி இருக்கு!
இன்னும் சில நிமிடங்கள் சேகரனின் அம்மாவிடம் பேசி விட்டு சத்யாவும் சக்தியும் ஜீப்பிற்கு திரும்பினார்கள்.
“டைம் வேஸ்ட் செய்த மாதிரி இருக்கு சக்தி,” என்றாள் சத்யா.
“நேத்தைல இருந்து ஒரு கேள்வி எனக்குள்ளே இருந்துட்டே இருக்கு சத்யா!”
“என்ன?”