அஹல்யா தான் நமக்கு தெரிஞ்சு இருக்கா. வேற யாரு சேகரன் வாழ்க்கைல இருந்தாங்க? வேற பொண்ணுங்க யாராவது?”
“இல்லை சக்தி. சேகரனுக்கு கல்யாணம் ஆகலை. காதல்ன்னும் எதுவும் இல்லை. அபினவ் கேஸ் ஃபைல் பார்த்து சொன்னப்போவே இதையும் சொன்னான். சேகரனுக்கு அம்மா மட்டும் தான் இருக்காங்க.”
“நாம அவங்களைப் போய் பார்ப்போமா சத்யா?”
“போகலாமே! அப்போவே அபினவ் கிட்ட கேட்டு அவங்க அட்ரஸ் வாங்கி என் மொபைல்ல சேவ் செய்து வச்சிருக்கேன்.”
“கலக்குறீயே சத்யா! நீ தான் லேடி ஷெர்லாக்!!!”
இருவரும் ஒன்றாக மாடியில் இருந்து இறங்கி வந்தார்கள். அங்கே இப்போதும் பாட்டிகள் மாநாடு நடந்துக் கொண்டிருந்தது.
“ஒரு வேலை இருக்கு பாட்டி. போயிட்டு வந்திடுறேன்!” சக்தி பர்வதம் பாட்டியிடம் சொன்னாள்.
சத்யா அங்கிருந்த மற்றவர்களிடம் பேசி விட்டு, சாந்ததுரைக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு வந்தாள்.
“அவனுக்கு எதுக்கு ஹாய் எல்லாம் சொல்ற சக்தி?” சக்தி திரும்பவும் பழைய எரிச்சல் தோரணையில் கேட்டாள்!
“சொன்னா என்ன?”
“எனக்கு என்னவோ அவன் மேல சந்தேகமா இருக்கு. அவன் தான் உண்மையான சாந்ததுரைன்னு யாருக்கு தெரியும்?”