(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“இந்த அம்மா சொன்னதை வச்சுப் பார்த்தா அவங்க சேகரனோட கேஸ் விசாரணை பத்தியோ, டீடெய்ல்ஸ் பத்தியோ கவலைப் பட்ட மாதிரி தெரியலை. அவன் இறந்ததைப் பத்தி கவலைப் பட்டதா கூட தெரியலை. அப்போ யாரு அந்த மொட்டைக் கடிதங்களை அனுப்பினது? இந்த கேஸ் மேல யாருக்கு அவ்வளவு அக்கறை?”

  

“சவீதாவா இருக்குமோ???”

  

“இருக்கலாம்! உனக்கும் அந்த லெட்டரை அனுப்பினதை வச்சு பார்த்தா, நாம விசாரிக்குறது தெரிஞ்ச யாரோ தான் செய்திருக்கனும்!”

  

“ஆனால் ஏன்??? எதுக்கு???”

  

“அது தான் இப்போதைக்கு பதில் தெரியாத கேள்வி சத்யா! நாம திரும்ப சவீதா, டாக்டர் பிரசாத், பர்வீன், லிஃப்ட்ல இருந்த அந்த இன்னொரு டாக்டர்ன்னு எல்லோரையும் சந்திச்சுப் பேசனும் சத்யா.”

  

🌼🌸❀✿🌷

   

தே நேரத்தில் தென்றல்வாணனும் குழப்பத்துடன் அஹல்யாவின் வீட்டில் நின்றிருந்தான். அஹல்யாவின் வீட்டை தேடுவதற்கு போலீஸ் வாரண்டுடன் வந்து, தேடி பார்த்து சோர்ந்துப் போயிருந்தார்கள்.

  

அவர்கள் எதிர்பார்த்த ஒரு சாட்சியும் அங்கே இல்லை! ரத்தக்கறைகள் எதுவும் இல்லை! அஹல்யா சில பாத்திரங்கள், துணிகள் தவிர மற்ற பொருட்களை அங்கேயே தான் விட்டுச் சென்றிருந்தாள். வீட்டில் எதுவும் தேவை இல்லாமல் மாற்றி வைக்கப் பட்டதாகவும் தெரியவில்லை!

  

தென்றல்வாணன் நினைத்ததுப் போல சேகரன் இங்கே தான் இறந்திருந்தால் சின்ன தடயம் கூடவா இல்லாமல் போய் விடும்???

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.