(Reading time: 8 - 15 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

இருந்து தன் கையால் விலக்கி விட்டு, அவள் நெற்றியை தேய்த்துக் கொண்டிருந்த இடத்தில் தன் விரல்களால் பிடித்து விட்டான்.

  

அந்த நேரத்தில் அங்கே வந்தாள் சத்யா. SD & சக்தியை ஜோடியாக பார்த்து தவறான நேரத்தில் என்ட்ரி கொடுத்து விட்டோமோ என்று தயங்கி நின்றாள்!

  

சில வினாடிகளில் உணர்வு பெற்ற சக்தி, சாந்ததுரையின் கையை தட்டி விட்டாள்.

  

“இடியட்! னோ யுவர் லிமிட்ஸ்!” ஆட்காட்டி விரலை நீட்டி அவனை மிரட்டினாள்.

  

“மிஸ் லேடி ராம்போ! திட்டுங்க ஆனா தயவு செய்து அடிக்காதீங்க. உங்க அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி இருக்கு. அன்னைக்கு வாங்கின அடில இருந்தே இன்னும் நான் முழுசா ரெகவர் ஆகலை!” SD சொன்னதைக் கேட்டு சக்தி முறைத்தாள். தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சத்யாவோ வாய் விட்டு சத்தமாக சிரித்தாள்.

  

சத்யா அங்கே இருப்பதை சாந்ததுரை, சக்தி இரண்டுப் பேருமே அப்போது தான் கவனித்தார்கள்.

  

“ஹலோ மிஸர்ஸ் இன்ஸ்பெக்டர், எப்போ வந்தீங்க?” SD சத்யாவிடம் விசாரித்தான்!

  

“வணக்கம், அடி வாங்கி கட்டிக்குற டாக்டர்! உங்க ராம்போ உங்களை மிரட்டும் போதே வந்துட்டேன்,” என்றாள் சத்யா கேலியாக!

  

தொடர்ந்து சத்யாவும், SDயும் பேச இடம் கொடுக்காமல், “வா சத்யா கிளம்பலாம்,” என்று சொல்லி, சத்யாவின் கையை இழுத்துக் கொண்டு நடந்தாள் சக்தி.

  

சத்யாவும் சக்தியின் வேக நடைக்கு இணையாக நடந்தாள்.

  

“என் பொறுமையை சோதிக்குற சத்யா. காலையிலேயே போய் டாக்டர்ஸ், பர்வீன் எல்லோரையும் பார்த்து பேசி இருந்திருக்கலாம். இப்படி ஈவ்னிங் போனா அவங்க இருப்பாங்களோ என்னவோ,” என்றாள் சக்தி!

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.