(Reading time: 8 - 15 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“எல்லாம் காரணத்துக்காக தான் சக்தி. காலையில ஹாஸ்பிட்டல் போனா, எந்த ரீசன் சொல்லி டாக்டர் பிரசாத்தை பார்க்குறது?” சத்யா சக்தி பக்கம் திரும்பி பதில் சொன்னாள்!.

  

“இப்போ மட்டும் சும்மா போக முடியுமா? ஏதாவது காரணம் சொல்லி தானே ஆகனும் சத்யா?”

  

“ரைட் சக்தி! நேத்து பர்வீன் கிட்ட சும்மா பேசுற மாதிரி பேசினேன். டாக்டர் பிரசாத் மதியம் 2 மாதிரி வீட்டுக்கு கிளம்பிடுவாராம். திரும்ப சாயந்திரம் நாலரை மணிக்கு டான்னு ஹாஸ்பிட்டல் வருவாராம்! அதனால தான் நாம நாலு இருபத்தி அஞ்சுக்கு அங்கே போகலாம்னு சொன்னேன். இப்போ டாக்டர் காருல இருந்து இறங்கி ஹாஸ்பிட்டல் என்ட்ரன்ஸ் போற சமயத்துல எதேச்சையா சந்திக்குற மாதிரி அவர் கிட்ட பேசிடலாம். பர்வீன், சவீதா விஷயத்துல பிரச்சனையே இல்லை. அந்த இன்னொரு டாக்டர் கிளினிக் இருக்க அட்ரஸும் பர்வீன் கிட்ட விசாரிச்சு வச்சிருக்கேன். இவங்க மூணு பேரு கிட்டேயும் பேசிட்டு அங்கே போகலாம்.”

  

“வாவ்! சத்யா யூ ஆர் கூல்!”

  

“என்ன சக்தி மேடம், உங்க வீட்டுல இருக்க இங்கிலீஷ் துரைக்கு போட்டியா நீங்களும் இப்போ எல்லாம் இங்கிலீஷ்லேயே பேசுறீங்க, புகழ்றீங்க!!!!”

  

“ப்ச்! சத்யா ப்ளீஸ் அந்த இடியட் பத்தி மட்டும் என் கிட்ட பேசாதே. உயிரை எடுக்கிறான். புதுசா வீடு தேடுற வேலையை ஸ்டார்ட் செய்யனும். இந்த கேஸ் முடிச்ச உடனே அடுத்து அது தான்!”

  

“அந்த சாந்ததுரை இரண்டு மூணு நாள் இருந்துட்டு சென்னைக்கு கிளம்பிடுவான். அதுக்காக எதுக்கு இவ்வளவு யோசிக்குற சக்தி?”

  

“அதான் இல்லை சத்யா! அவன் சென்னை கிளினிக்கை மூடிட்டு, இங்கேயே வரப் போறானாம். வீட்டிலேயே கிளினிக் திறக்குற வேலையுல பாட்டியும் அவனும் மும்முரமா இருக்காங்க.”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.