“ஒரு முக்கியமான வேலை தரப் போறேன் விஜயன். சேகரன் கொலை விஷயத்துல தொடர்பு பட்டிருக்க அஹல்யா விவாகாரத்தானவங்க. அவங்க முன்னாள் கணவர் யாரு, இப்போ எங்கே இருக்காருன்னு எனக்கு முழு டீடெயில்ஸ் கண்டுப்பிடிச்சு சொல்லுங்க. இந்த விஷயம் நம்ம இரண்டுப் பேருக்கு மட்டும் தெரிஞ்சதா இருக்கட்டும்.” அமைதியான குரலில் விஜயனுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் சொன்னான் தென்றல்வாணன்.
“ஓகே சார்,” என்றார் விஜயன்!
சரியான திசையில் செல்வதாக தென்றல்வாணனின் உள்ளுணர்வு அவனை தட்டிக் கொடுத்தது.
🌼🌸❀✿🌷
சக்தியின் ஜீப் ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்த சில நிமிடங்களில் ஒரு வெள்ளை நிற பென்ஸ் கார் வந்து நின்றது.
“அது தான் டாக்டர் பிரசாத் கார் சக்தி. நான் பேசுறேன். நீ என் கூட இரு. ஏதாவது கேட்கனும்னா, என் கிட்ட சொல்லு!” சத்யா வேகமாக சக்திக்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தாள்!
சக்தி, சத்யா இருவரும் ஜீப்பில் இருந்து இறங்கினார்கள். டாக்டர் பிரசாத்தும் காரில் இருந்து இறங்கி மருத்துவமனை நோக்கி நடந்தார்.
“ஹலோ டாக்டர், எப்படி இருக்கீங்க?” சத்யா சாதாரணமாக பேச்சை தொடங்கினாள்.
டாக்டர் பிரசாத் நின்று யாரென்று பார்த்தார். சத்யாவை உடனே அடையாளம் கண்டுக் கொண்டார்.
“எப்படிம்மா இருக்க சத்யா? ஹாஸ்பிட்டல் வந்திருக்கீயே உடம்பு ஏதாவது சரி இல்லையா?”
“அதெல்லாம் இல்லை டாக்டர். ஜெனரல் செக் அப் செய்யனும். நானும் என் ஃப்ரெண்டும் இந்த பக்கம் வேற வேலையா வந்தோம். அப்படியே ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கிடலாம்னு