(Reading time: 8 - 15 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

அதனால் என்ன பாரதி... சரி, நான் கீழே இருக்கேன் உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லு...”

  

இல்லை அண்ணி நீங்க இருங்க, நான் போறேன்...” என்று சொல்லி விட்டு விவேக் அவசரமாக வெளியே சென்றான். போகும் முன் பாரதியையும் பார்த்து தலை அசைத்து விட்டு தான் கிளம்பினான்...

  

அறையை விட்டு வெளியே வந்த பிறகு, என்ன செய்வது என யோசித்த விவேக், நேராக தன் ஆஃபீஸ் அறைக்கு சென்றான். அங்கிருந்து அவனின் செக்ரட்டரி லதாவை அழைத்துப் பேசினான். ஆஃபீசில் அவன் பாதியில் விட்டு வந்த வேலைகளில் வீட்டிலிருந்து செய்ய கூடியவற்றை லதாவிடம் கேட்டு தெரிந்துக் கொண்டு, அதை செய்ய தொடங்கினான்.

   

நேரம் போவது தெரியாமல் மும்முரமாக வேலையில் ஆழ்ந்து இருந்தவன், மணி ஐந்தரையை நெருங்குவதை உணர்ந்ததும் வேலையை விட்டு விட்டு பாரதியை தேடிச் சென்றான். பாரதி அவர்களின் அறையில் இல்லை என்பது தெரியவும், அவளை தேடி கீழே சென்றான்... பாரதி தோட்டத்தில் இருப்பது கண்ணில் படவும், அவளருகில் சென்றான்.

  

"இப்போ எப்படி இருக்கு ரதி? பரவாயில்லையா? இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு..."

   

எனக்கு தான் எதுவுமில்லையே... இதுக்கு மேல ரெஸ்ட் எல்லாம் வேண்டாம்... உங்களுக்கு கொஞ்சம் டைம் இருந்தா சொல்லுங்களேன்... எனக்கு பவித்ரா வீட்டில ஒரு சின்ன வேலை இருக்கு... ஒரு அரை மணி நேரம் போல ஆகும்...”

  

இப்போவே போகலாமே, நான் ஃப்ரீ தான் ரதி.”

  

டூ மினிட்ஸ் கொடுங்க... நான் சாரீ மாத்திட்டு வரேன்...”

  

பாரதி சொல்லிவிட்டு மாடிக்கு செல்லவும், விவேக் மீண்டும் ஹால் பக்கம் வந்து அமர்ந்தான். அதே நேரம் அங்கிருந்த தொலைபேசி அடிக்க தொடங்கியது. அதை எடுத்துப் பேசிய விவேக், அது அவனும் பாரதியும் சென்ற மருத்துவமனையில் இருந்து வந்த அழைப்பு என்பதை

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.