(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 50 - பிந்து வினோத்

50. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

விவேக்கால் தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை! முப்பதுகளில் இருக்கும் ஆரோக்கியமான இளைஞன்... அவன் இதுவரை மரணம் என்றில்லை எழுபது, என்பது வயதில் அவனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை எல்லாம் கூட நினைத்து பார்த்ததில்லை... மரணம், முதுமை எல்லாம் இன்னும் எத்தனையோ வருடங்கள் கடந்து வரப் போவது என்ற எண்ணம் மட்டுமே அவனிடம் இருந்தது...

   

"... ஐ னோ ஹவ் யூ ஃபீல்!"

   

டாக்டர் தாமஸ் இப்போதும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் விவேக் அவரின் பேச்சில் ஐம்பது சதவிகிதத்தைக் கூட கவனிக்கவில்லை! '..உங்க ஆயுசு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவு தான்...' என அவர் சொன்ன இடத்திலேயே அவன் உறைந்துப் போயிருந்தான்...

   

கதவு மெல்ல தட்டப்பட்டு திறக்கப்பட... அறையின் உள்ளே வந்த நர்ஸ்,

   

"டாக்டர் ரிப்போர்ட்க்காக இன்னும் மூணு பேர் வெயிட் செய்துட்டு இருக்காங்க..." என்றாள் தயக்கத்துடன்...

   

டாக்டர் தாமஸ் விவேக்கைப் பார்க்க, விவேக் எதுவும் சொல்லாமல் எழுந்துக் கொண்டான். கையிலிருந்த ரிப்போர்ட் ஃபைலை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு நடந்தான்...

   

"அடுத்து உங்க கன்சல்டேஷன்..." என்று சொல்லத் தொடங்கிய நர்ஸ் தொடங்கி, எதிரே வந்த ஒருவரையும் கவனிக்காமல், கவனிக்க விருப்பம் இல்லாமல் நேராக தன் காரை நோக்கி நடந்தான்!

   

அவனின் காரை கண்டுபிடித்து காரினுள் அமர்ந்தான்... அது வரை அடக்கி பிடித்து வைத்திருந்த எண்ணங்கள் கரை உடைத்து அவன் மனதில் ஓட தொடங்கின... ஒரு வருடம்!!! அவனுக்குள் இயலாமை, ஆதங்கம், வருத்தம், துக்கம் என அனைத்து விதமான உணர்வுகளும் பேரலையாக எழுந்து வாட்டி வதைத்தது!!

   

ஒரு வருடம்!!!! அவனின் கனவுகள், ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற அவனுக்கு

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.