(Reading time: 19 - 38 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

தொடர்கதை - பூவா? தலையா? - 03 - சசிரேகா

றுநாள் கோவலன் கலைக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி ஸ்ட்ரைக் செய்தார்கள்

  

”பிரின்சிபால் டவுன் டவுன் பிரின்சிபால் டவுன் டவுன்” என அவர்கள் கோஷம் முழங்கினார்கள்.

  

கோவலனோ அதைக்கண்டபடியே தன் வண்டியை ஓட்டிக் கொண்டு உள்ளே வர அவனை யாரும் தடுக்கவில்லை போகவிட்டார்கள், அதுவே அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது அடுத்து மாதவியுடன் ஸ்கூட்டியில் வந்திறங்கினாள் கண்ணகி, மாதவியோ மாணவர்களின் ஸ்ட்ரைக் கண்டு பயந்தாள்

  

”கண்ணகி எனக்கு பயமாயிருக்கு பிரச்சனையில மாட்டிக்காத”

  

”எனக்கு ஒண்ணும் ஆகாது நீ கவலையில்லாம போய் உன் வேலையை பாரு”

  

”இருந்தாலும்”

  

“நான் பார்த்துக்கிறேன்”

  

”எப்படிடி”

  

”பிரச்சனைக்கான தீர்வு என்கிட்ட இருக்கறப்ப ஏன் கவலைப்படனும் ரிலாக்ஸ் நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு” என சொல்ல அவளும் அரைமனதுடனே கிளம்பிச் சென்றாள்.

  

அவள் சென்றதும் கண்ணகி கல்லூரிக்குள் நுழைய மாணவர்கள் தொண்டை கிழிய கத்தினார்கள் கூச்சலிட்டார்கள்

  

”பிரின்சிபால் டவுன் டவுன் பிரின்சிபால் டவுன் டவுன்” என்று அதைக்கேட்டபடியே துளியும் பயமின்றி துணிச்சலாக நடந்து தன் அறைக்குச் சென்றாள். அவள் வந்ததை அறிந்த கோவலன் அவசரமாக அவளை தேடி வந்தான்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.