(Reading time: 19 - 38 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”பின்ன நீங்க என்னை டவுன் டவுன்னு சொன்னீங்க நானும் உங்களை டவுன் டவுன்னு சொல்றது தப்பா”

  

”உங்களால எங்களோட சுதந்திரம் போச்சி எங்களை அடக்குமுறையா நடத்தறீங்க”

  

”யாரு நானா அப்படி என்ன செய்துட்டேன் உங்களை படிக்க சொன்னேன் ஒழுக்கமா இருக்க சொன்னேன் அது தப்பா”

  

“எங்களுக்கு எப்ப படிக்கனும்னு நல்லாவே தெரியும்“

  

”ஓ அப்படியா சரி சொல்லுங்க சேர்மன், செமஸ்டர் எக்ஸாம் எப்ப வருது” என கேட்க அவனோ திருதிருவென விழித்தான்

  

”என்னாச்சி தெரியலையா”

  

“அது வரும் போது வரும் அதுக்கு இன்னும் நாள் இருக்கு”

  

”அப்படின்னு யார் சொன்னா இன்னும் 15 நாள்ல உங்க எல்லாருக்கும் செமஸ்டர் எக்ஸாம் இருக்கு” என சொல்ல மாணவர்கள் அரண்டார்கள், அதைக்கேட்டு ஆசிரியர்களும் கதிகலங்க கோவலனோ திகைத்தான்

  

”என்ன உளர்ற கண்ணகி, இப்ப ஒண்ணும் செமஸ்டர் கிடையாது அதுக்கு இன்னும் 2 மாசம் இருக்கு”

  

”இப்ப நான்தான் இங்க பிரின்சிபால், நான் என்ன சொல்றேனோ அதுதான் இங்க நடக்கும் நடக்கனும் நடந்தே தீரனும்” என்றாள் அழுத்தமாக அதில் அவன் நொந்துப் போனான்

  

உடனே மாணவர்களின் மத்தியில் கூச்சல் எழுந்தது, அதைக்கேட்ட கண்ணகியோ

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.