(Reading time: 19 - 38 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”ஏய் என்ன கிண்டலா”

  

“சார் போதும் யாரை எப்படி நடத்தனும்னு எனக்கு நல்லாவே தெரியும், என் வேலையை என்னை செய்ய விடுங்க”

  

”ஓ தாராளமா போம்மா போ போய் அவங்ககிட்ட மாட்டி முழி” என சொல்ல அவளோ சிரித்தபடியே அறையைவிட்டு வெளியேறினாள்.

  

தாத்தாவின் பேச்சிற்கு கட்டுப்பட்டு கோவலனும் அவளுக்கு பாதுகாப்பாக இருந்தான்.

  

தாளாளருடன் வந்த கண்ணகியைக் கண்டதும் மாணவர்கள் சற்று அமைதியானார்கள் அதைக்கண்ட சிலம்பரசனுக்கு கோபமே எழுந்தது.

  

கண்ணகி அங்கிருந்த அனைவரையும் பார்த்தாள், அனைவரும் தரையில் அமர்ந்து பிரின்சிபால் டவுன் டவுன் என பலகையில் எழுதியிருந்தார்கள், அதைக்கண்டு மென்மையாக சிரித்தவள் ப்யூனை அழைத்தாள்

  

”மேடம்“

  

”சேர் கொண்டு வந்து போடுங்க” என சொல்ல அவனும் ஓடிச் சென்று இரு சேர்களை கொண்டு வந்து வைத்தான்.

  

அதில் ஒன்றில் அவள் அமர இன்னொன்றில் கோவலன் அமர்ந்தான்.

  

அவர்கள் அமர்ந்ததும் மாணவர்கள் மறுபடியும் கத்தினார்கள்.

  

”பிரின்சிபால் டவுன் டவுன் பிரின்சிபால் டவுன் டவுன்” என முழக்கமிட கண்ணகியோ தான் கையோடு கொண்டு வந்திருந்த இரு காகித பலகைகளை எடுத்து அதில் ஒன்றை கோவலனிடம் தந்துவிட்டு இன்னொன்றை அவள் வைத்துக் கொண்டு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.