(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

விவேக்காக பேச்சை தொடங்குவான் என காத்திருந்த பாரதி, அவன் பேசுவதாக தோன்றாததால், அவளே பேச்சை துவங்கினாள்.

  

உங்களுக்கு வேலை இருந்தா சொல்லி இருக்கலாமே? ஃப்ரீன்னு தானே சொன்னீங்க??? இப்படியா சொல்லாம கொள்ளாம என்னை விட்டுட்டுப் போறது?”

  

அமைதியாக கேட்க பாரதி முயன்றப் போதும், அந்த பேச்சில் ஒட்டிக் கொண்டிருந்த அவளின் கோபம் விவேக்கிற்குப் புரிந்தது! அவளை ஒருப் பார்வை பார்த்து விட்டு அவன் அமைதியாகவே இருந்தான்.

  

விவேக்கின் அமைதி மேலும் அவளின் கோபத்தை கிளற, “ப்ச்...” என அலுத்துக் கொண்டாள் பாரதி.

  

போக்குவரத்து இல்லாத இரவு நேரம் என்பதால், வேகத்தை குறைத்து விட்டு மனைவி பக்கம் விவேக் பார்வையை திருப்பவும்,

  

என்ன ஏதுன்னு கூட சொல்ல மாட்டீங்களா ஆனந்த்? உங்க கையில் ஃபோன் இல்லை, சரி, வேற யார் கிட்டேயாவது வாங்கி ஒரு கால் செய்திருக்கலாம் தானே? நான் உங்களுக்கு அவ்வளவு முக்கியம் இல்லாதவளா? ஒரு சாரி கூட கிடையாதா?” என்றாள்!

  

கோபம், வருத்தம், அலுப்பு என ஒரு கலவையாக பாரதி பேசவும்... அதற்கு ஏற்றார் போல் அவளின் கண்கள் மின்னவும்... மற்றதை எல்லாம் மறந்து, காரை ஓரமாக நிறுத்தி விட்டு... கோபமாக பேசிக் கொண்டிருந்த மனைவியை அவசரமாக தன் அருகே இழுத்து, அவள் உதடுகளில் முத்தமிட்டான் விவேக்!

   

எதிர்பாராத அவனின் அணைப்பிலும் முத்தத்திலும் தடுமாறிய பாரதி, வேகமாக அவனின் அணைப்பில் இருந்து விலகி, அதிகமாகி விட்ட கோபத்துடன்,

  

என்ன இது, சாரி சொல்ல சொன்னால்...”

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.