எண்ணங்கள் கட்டுக்கடங்காமல், திக்கு திசை இல்லாமல் அலைப் பாய்ந்து ஓடியது...
ஏதேதோ நினைவுகள், கேள்விகள் என குழம்பி இருந்த விவேக்கின் மனம், மிக அருகில் உரக்க ஒலித்த ஏதோ காரின் ஹாரன் ஒலியில் நடப்பிற்கு வந்தது. சூழ்ந்திருந்த இருளும், அங்கங்கே ஒளிக் கொடுத்து கொண்டிருந்த தெரு விளக்குகளும் கவனத்தில் வரவும், அவசரமாக கடிகாரத்தை பார்த்தான். மணி ஒன்பதரை ஆகி இருப்பதை தெரிந்துக் கொண்டு, வேகமாக காரை கிளப்பினான். அதிக நேரம் எடுக்காது என்று நினைத்து பாரதியிடம் சொல்லாமல் வந்தது அப்போது தான் அவனுக்கு நினைவில் வந்தது!!!
🌼🌸❀✿🌷
விவேக் எதிர்பார்த்ததுப் போலவே பாரதி கோபத்துடன் தான் இருந்தாள். தோழியின் குடும்பத்தினர் முன் கோபத்தை மறைக்க அவள் முயன்ற போதும், விவேக்கிற்கு அவளின் மனநிலை புரிந்தது. எப்போதும் போல, அவனின் காதல் மனம் அதை ரசித்தப் போதும், மற்றொரு பக்கம் வலிக்கவும் செய்தது!
பொதுவாக, “சாரி, எதிர்பார்க்காம லேட் ஆயிடுச்சு...” என்றான்.
“அதனால் என்ன விவேக், பரவாயில்லை... பிஸ்னஸ்ன்னு இருக்கும் போது இதெல்லாம் சகஜம் தானே... ஃபோனை மட்டும் பத்திரமா வச்சுக்கோங்க... பாவம் பாரதி கொஞ்சம் பயந்து போய்ட்டா...” என்றான் ரமேஷ்!
“ஆமாம்... என் ஃபோன் ரிப்பேர் ஆயிடுச்சு... புது ஃபோன் வாங்கனும்...”
“சரி, லேட் ஆச்சே இரண்டு பேரும் சாப்பிட்டுட்டு கிளம்பலாமே?” என்றாள் கமலா.
மனைவியை ஒரு பார்வை பார்த்த விவேக், “உங்களுக்கு தொல்லை...” என எதுவோ சொல்லத் தொடங்கினான்.
அவன் வாக்கியத்தை முழுவதுமாக முடிக்கும் முன்பே,