(Reading time: 24 - 48 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”உனக்காகதான் வாங்கினேன்”

  

”எனக்கெதுக்கு என்கிட்டதான் நிறைய புடவைகள் இருக்கே”

  

”கண்ணகி இப்ப நீ ஒரு காலேஜ்கே பிரின்சிபால் பதவிக்கு ஏத்த மாதிரி உடையிருக்கனும் இன்னும் நீ ஸ்கூல் டீச்சர் நினைப்பிலேயே இருந்தா எப்படி சொல்லு இதெல்லாம் உனக்குதான் ப்ளீஸ் எனக்காக உடுத்திக்க”

  

”சரிடி” என சொல்லிய கண்ணகி அந்த புடவைகளை பிரித்துப் பார்த்து பரவசப்பட்டாள்

  

”நல்லாவே செலக்ஷன் பண்ணியிருக்க எனக்கு பிடிச்சிருக்கு”

  

”அது போதும் எனக்கு”

  

என சொல்ல தனியாக இருந்த துணிப்பையை எடுத்தாள் கண்ணகி

  

”இதுல என்ன இருக்கு”

  

”அதுலயும் புடவைதான் இருக்கு”

  

”இதுவும் எனக்கா”

  

”இல்லை எனக்கு”

  

”உனக்கா என்ன ஆச்சர்யமா இருக்கு புடவைன்னாலே உனக்கு பிடிக்காதே”

  

”அந்த கூத்தை ஏன் கேட்கற துணிக்கடையில தாளாளரை பார்த்தேன், என்ன செய்றன்னு கேட்டாரு நான் புடவை எடுக்கறதை சொன்னேன், உடனே அவர் ஒரு புடவையை கொண்டு வந்து தந்து இதை என் பிறந்த நாள் அன்னிக்கு கட்டிக்கோன்னு சொல்லிட்டு போயிட்டாரு”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.