கிடையாது!!”
“தரலைனா போ! SD கிட்ட சொன்னா செய்து தரப் போறார்!”
இதெல்லாம் வேற நடக்கிறதா, என்ற யோசனையுடன் சக்தியிடம் விடைப் பெற்றாள் சத்யா.
பர்வதம் பாட்டியை திரும்பவும் பாராட்டி விட்டு, அந்த வீட்டு கேட்டை தாண்டும் போது சாந்ததுரை அவளின் எதிரில் வந்தான்.
“என்ன டாக்டர், தோசை எல்லாம் செய்றீங்களாமே? இப்போ தான் ஃப்ளாஷ் நியூஸ் வந்துச்சு???” சத்யா கேலியாக கேட்டாள்.
“தோசையா??? இல்லையே! டீ மட்டும் தான் பாட்டிக்கும், சக்திக்கும் போட்டுக் கொடுத்தேன்,” என்றான் சாந்ததுரை!
“பெரிய சமூக சேவகரா இருக்கீங்களே!!!”
“சக்தி நான் போட்டுக் கொடுத்த டீ பத்தி உங்க கிட்ட சொன்னாங்களா??” சாந்ததுரை கேட்ட விதத்தில் சத்யா அவனை வித்தியாசமாகப் பார்த்தாள்.
“ஒரு கப் டீ போட்டுக் கொடுத்துட்டு இவ்வளவு அலப்பற தேவையா???” சத்யா வேண்டுமென்றே அவனை சீண்ட சொன்னாள்!
“என்ன டீ பத்தி இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க? கரக்ட் அளவு தண்ணி, டீத்தூள்...“
“சார், டாக்டர் சார்! நான் டீ போட்டதே இல்லை! போதும் நிறுத்துங்க!!”
“ஹி ஹி ஹி! சக்திக்காக ஸ்பெஷலா போட்டுக் கொடுத்தேன் சிஸ்டர், அதான் அவங்களுக்கு பிடிச்சுதான்னு தெரிஞ்சுக்க கேட்டேன். வேற ஒன்னுமில்லை!!!”
“ஒன்னுமில்லாம இருக்க வரைக்கும் சரி தான்! அன்னைக்கு கண்ணுல டிங்சர் போட்டப்போ