(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 02 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

நிலாவின் முகத்தைப் பார்த்து விட்டு, “திரும்பவும் அதே பயங்கர யோசனையா? உனக்கு நல்லதாகவே நினைக்க தெரியாதா????” என காஃபியை அவள் பக்கம் நீட்டியபடி கேட்டாள் மிருதுளா.

  

நான் என்ன யோசிச்சேன்னு...”

  

நிலாவை மேலே பேச விடாமல் தடுத்த மிருதுளா,

  

நீ சொல்லவே வேண்டாம், உன் முகத்தைப் பார்த்தாலே தெரிஞ்சது! முன்னாடியே என் கிட்ட சொன்னீயே அந்த கொள்ளைக்காரி, தீவிரவாதி கதை தானே? இங்கே பார் நிலா, நீ பழகும் விதம், நடந்துக்குறது எல்லாம் பார்க்கும் போது, எனக்கு என்னவோ நீ நல்ல பொண்ணு, நல்ல குடும்பத்து பொண்ணுன்னு தான் தோணுது. இவரு அடுத்த மாசம் மதுரைக்கு வேலையா போகணும். அப்போ அங்கே இருக்க கமிஷனர் அஃபீஸ்ல உன்னோட விபரம் சொல்லி வைக்குறேன்னு சொல்லி இருக்கார். அந்த ஸ்டேஷன் எல்லாம் நம்ம கிராமத்து ஸ்டேஷன் போல இல்லை. கட்டாயம் ஏதாவது விபரம் கிடைக்கும். நீ யோசிக்குறதை நல்லதா யோசி...” என்றாள்.

  

நல்லதான்னா என்ன யோசிக்குறது?”

  

உன் கழுத்துல தாலி இல்லை... ஸோ கல்யாணம் ஆகலை... ஆனால் உனக்கு ஒரு காதலன் இருந்திருக்கலாம்... நீ அப்படியே அவனை நினைச்சு உருகிட்டே இருந்திருக்கலாம்! இப்படி ஏதாவது யோசிச்சு பாரேன், உனக்கு ஏதாவது தோணுதான்னு...”

  

நிலா காஃபியை பருகியபடி யோசித்தாள்.

  

காதல்!

  

அவள் யாரையேனும் காதலித்திருப்பாளா????

  

காதல் என்ற உடனே அவளுக்கு மிருதுளா தான் நினைவுக்கு வந்தாள்... வெற்றியை பார்க்கும்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.