வெற்றியின் குரல் நிலாவை சிந்தனையில் இருந்து வெளியே அழைத்து வந்தது.
“நில்லுங்க! அத்தை தூங்கட்டும், நாங்க வேலையை கவனிக்குறோம். பாவம் அவங்களை ஏன் தொல்லை செய்துட்டு?” என்ற மிருதுளாவிற்கு,
“ஆமாம் நாங்களே பார்த்துப்போம்” என்று நிலாவும் ஒத்து ஊதினாள்.
இருவரையும் ஒரு பார்வை பார்த்த வெற்றி,
“சரி, சரி, ஆரம்பிங்க!” என்றபடி நடந்தான்.
“நிலா நீ தேங்காயை துருவி சட்னிக்கு அரைச்சு வச்சிடுறீயா? நான் இந்த காஃபியை அவருக்கு கொடுத்துட்டு வரேன்,” என சொல்லிக் கொண்டே காஃபி கோப்பையை கையில் எடுத்தாள் மிருதுளா!
“இப்போ அண்ணா இங்கே வந்தப்போவே கொடுத்திருக்கலாம்ல?”
“ஹி ஹி! மறந்துட்டேன்!!!”
“மறந்துட்டீங்க! ஆமாம், ஆமாம்... எனக்கு தான் தெரியுமே... சீக்கிரம் வாங்க! அந்த மிக்சியோட மல்லுக்கட்ட என்னால முடியாது!”
“நீ எல்லாம் எடுத்து வை, நான் வந்து அரைக்கிறேன்...”
மிருதுளா காஃபி கோப்பையுடன் செல்ல, நிலா வேலையை தொடர்ந்தப் படி அவளின் சிந்தனையில் தோன்றியவனை பற்றி யோசிக்கத் தொடங்கினாள்.
🌼🌸❀✿🌷