மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 45 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
நர்ஸ் பகிர்ந்த விபரங்கள் பற்றி யோசித்துக் கொண்டே அறைக்குள் வந்தாள் சக்தி. அங்கே சாந்ததுரை அவளுடைய லேப்டாப்பும் கையுமாக இருப்பதை பார்த்து கடுப்பாகிப் போனாள்!
சாந்ததுரை அவளை பார்த்ததும் எழுந்துக் கொண்டான்!
“சாரி, லேடி ராம்போ. அடிக்க கையை தூக்காதீங்க. நீங்க என்னோட சின்ன வயசு போட்டோவை age progression சாஃப்ட்வேர்ல வச்சு இப்போ எப்படி இருப்பேன்னு இமேஜ் க்ரியேட் செய்து வச்சு இருக்கீங்கன்னு சத்யா சொன்னாங்க. நான் அதுல எப்படி இருக்கேன்னு பார்க்கலாம்னு நினைச்சேன்!”
“லேப்டாப்ல பாஸ்வோர்ட் இல்லாமலா வச்சிருப்பேன்?”
“பாஸ்வோர்ட் இருக்கும்னு தெரியும். கண்டுப்பிடிச்சிடலாம்னு நினைச்சேன். சக்தி, பிரணய், இதோ கேர்லஸா தூக்கி போட்ருக்க உங்க ஐடில இருக்க உங்க பிறந்த தேதின்னு எல்லாம் ட்ரை செய்துட்டேன். எதுவும் வொர்க் ஆகலை. சாந்ததுரைன்னு போடலாம்னு டைப் செய்யும் போது நீங்க வந்துட்டீங்க!”
சக்தி அவன் கையிலிருந்த லேப்டாப்பை வலுக் கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு, அதை வைத்து அவனை அடிப்பதுப் போல மேலே கொண்டுப் போனாள்.
“என்னை அடிக்குறது சரி. அப்புறம் உங்க லேப்டாப் ரிப்பேர் ஆகிட போகுது. அதையும் யோசிச்சுக்கோங்க!”
சக்தி லேப்டாப்பை கீழே இறக்கி வைத்தாள்.
“அந்த சாஃப்ட்வேர்ல இருக்க படத்தை மட்டும் காட்டுங்க லேடி ராம்போ. நான் பார்த்துட்டு அப்படியே கிளம்பிடுறேன்!”
“நான் இப்போ அதை எல்லாம் ஓபன் செய்ற மனநிலைல இல்லை. வேற ஒரு விஷயம் என்னை nag செய்துட்டே இருக்கு.”