கீழ இறங்க மாட்டாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு...”
கோபத்துடன் பாரதியைப் பார்த்து ஏதோ பேச வாய் திறந்த பவித்ரா, பாரதியின் முகத்தில் இருந்த குழப்பத்தை பார்த்து சொல்ல வந்ததை சொல்லாமல் வாயை மூடிக் கொண்டாள்! பின், மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டு பேசினாள்!
“சரி பாரு, இப்போ என்ன செய்யலாம், சொல்லு! இவர் கிட்ட சொல்லி விவேக் கிட்ட நேரடியா பேச சொல்லவா???”
“வேண்டாம் பவி... இப்போதைக்கு இது எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம்... நான் கொஞ்சம் ஃப்ரீயா யோசிக்கனும்... என்ன செய்றதுன்னு ஒரு முடிவுக்கு வரணும்... அங்கே வீட்டில இருந்து என்னால எந்த முடிவையும் எடுக்க முடியலை... எல்லாமே குழப்பமா தெரியுது... அம்மா அப்பா இருந்திருந்தா அவங்களை பார்க்குறேன்னு சொல்லிட்டாவது போகலாம்... இப்போ ஏதாவது பொய் சொல்லி ஊருக்கு போகலாம்னு நினைக்குறேன்...”
“என்ன பேசுற பாரு? நீ கிளம்பி வீட்டுக்கு வா...”
“அதுல நிறைய கேள்வி வரும் பவி... உன் வீட்டுல அம்மா கிட்ட, அண்ணா கிட்ட எல்லாம் என்ன சொல்றது? இங்கே வீட்டிலேயும் மாமாக்கும் அத்தைக்கும் எங்க இரண்டு பேருக்கு நடுவில் ஏதோ சரி இல்லைன்னு அரசல் புரசலா தெரியும்...”
பவித்ராவிற்கு பாரதியை தனியாக ஊருக்கு அனுப்ப விருப்பமில்லை... அவளின் வீட்டிற்கு வந்தால் பாரதிக்கு நல்ல ஒரு மாற்றமாக இருக்கும் என நம்பினாள்...
“அத்தையையும், அவரையும் நான் சமாளிக்குறேன்... நாம ஏதாவது ப்ளான் செய்யலாம்... நீ தனியா ஊருக்கு போற பேச்சே வேண்டாம்... எங்க வீட்டுக்கு வா...”
பாரதி பவித்ராவின் அன்பில் நெகிழ்ந்துப் போனவளாய் தோழியை அணைத்துக் கொண்டாள்.
“தேங்க்ஸ் பவி... நான் உனக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன்... இதுக்கெல்லாம் நான் உனக்கு எப்படி...”