(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

உனக்கு இந்த விஷயம் எல்லாம் எப்படி தெரியும்?” என அவளிடம் கேட்டார் நரேந்திரன்.

  

இது என்ன தங்கமலை ரகசியமா அப்பா? அண்ணன் ஒரு வருஷத்துக்கு முன்னாடி காலேஜில அடிச்ச கூத்துல காலேஜில ஆல்மோஸ்ட் எல்லோருக்கும் தெரியும்..."

   

நரேந்திரனும் கற்பகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மகளைப் பார்க்க, உமா விழிகளை விரித்து மதுவைப் பார்த்தாள்!

   

அவர்களை கவனித்த மது,

   

"என்ன பார்க்குறீங்க, காலேஜ்ல பத்மாவதி மேடம், ராசி மேடம் கிட்ட சொன்னாங்க... எங்க சீனியர் கவிதாவும் ராசி மேடமும் க்ளோஸ்... ஸோ ராசி மேடம் கவிதா கிட்ட சொன்னாங்க... கவிதாவோட சிஸ்டருடைய க்ளோஸ் ஃப்ரென்ட் என் கிளாஸ்மேட்... அப்புறம் இதை நான் தெரிஞ்சுக்குறதுல என்ன கஷ்டம் இருக்கு? இது காலேஜில நான் கேள்விப்பட்ட முழு கதையில ஒரு சின்ன பார்ட் தான்...” என்றாள்!

  

ஒரு சில வினாடிகள் அமைதியில் கழிந்தது. விவேக் பேசுவான் என்று எதிர்பார்த்து அமைதியாக இருந்த கற்பகம், அவன் தொடர்ந்து மௌனம் சாதிக்கவே,

  

மது செல்லம், நீ நினைக்குற மாதிரி எல்லாம் எதுவுமே இல்லை... உன்னுடைய அண்ணி கிட்டேயே கேட்டுப் பாரேன்... எங்களுக்குள்ளே எந்த மனஸ்தாபமும் இல்லை... உன் அண்ணியை புரிஞ்சுக்க எனக்கு கொஞ்சம் டைம் தேவைப் பட்டது, அவ்வளவு தான்... உன் அண்ணன் அண்ணி விஷயத்தில எல்லாம் நீ மூக்கை நுழைக்குறது சரியில்லை... அது உன்னுடைய ஃபேவரைட் அண்ணிக்கே பிடிக்காது... இனிமேல் நீ சொன்னதுக்காகவே உன் அண்ணி மேல அன்பு மழை பொழியுறேன், போதுமா? எனக்கு என்னுடைய குழந்தைகள் சந்தோஷமா இருந்தாலே போதும் வேற எதுவும் வேண்டாம்...” என்றாள் மென்மையாக!

  

கற்பகம் சொன்ன விதத்தில் மனம் நெகிழ்ந்த மது,

  

சாரி அம்மா, கோபத்தில் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுக்கோங்க...” என்றாள்!

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.