(Reading time: 9 - 18 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

வச்சிருந்த இம்போர்டட் வாக்கிங் ஸ்டான்ட் வச்சு அவனை பலமா அடிச்சிருக்கார். அப்போவே சேகரன் சாகலை மயக்கமாகி இருக்கான். இருந்தாலும் அவனை விட்டு வைக்குறது நல்லதுக்கு இல்லைன்னு புரிஞ்சு பிரசாத் அடுத்த புது ப்ளான் செய்திருக்கார்."

  

"அப்போ இது எதிர்பார்க்காம நடந்த ஆக்சிடன்ட் இல்லை? ப்ளான் செய்து செய்த கொலை?"

   

"எஸ் சார்! சேகரன் மயங்கினதும் பிரசாத் உடனடியா ப்ளான் செய்திருக்கார்! சேகரனை தீர்த்துக் கட்டுரதொட அஹல்யா மேல பழி வர மாதிரி செய்றதும் அவரோட திட்டம். தன்னோட SUVல சேகரனோட பைக்கையும், மயக்கமா இருந்த சேகரனையும் வச்சு எடுத்துட்டு போயிருக்கார். வழில, அஹல்யா வீட்டு பக்கத்துல இருந்து சேகரன் செல்ஃபோன் யூஸ் செய்து ஃபோன் செய்திருக்கார். அதுக்கு அப்புறம் குறுகலா இருக்க வளைவு பக்கம் போயிருக்கார். மயக்கமா இருந்த சேகரனை பைக்குல வச்சு அவரே கீழே தள்ளி விட்டுட்டார். கேர்ஃபுல்லா, பைக் ஸ்கிட் ஆன மாதிரி தெரியாத மாதிரி சுவடில்லாம பார்த்துக் கிட்டார். அது கொலைன்னு சந்தேகம் வரணும் ஆனா எல்லா சாட்சியும் அஹல்யா பக்கம் பாயின்ட் செய்ற மாதிரியும் இருக்கனும்னு பக்காவா ப்ளான் செய்திருக்கார். அவருக்கு டூ இன் ஒன் நன்மை. அஹல்யா ஜெயிலுக்கு போயிடுவா, உண்மை தெரிஞ்ச சேகரன் க்ளோஸ். பணம், சொத்துன்னு பேராசைப் பட்டு என்ன எல்லாமோ செய்திருக்கான். இவனை எல்லாம் உயிர் காக்குற டாக்டர்ன்னு சொல்றதே அசிங்கம் சார்!”

  

கன்னிங் ஃபெலோ. உனக்கு எப்படி பிரசாத் மேல சந்தேகம் வந்துச்சு தேன்?”

  

அந்த மொட்டைக் கடிதம் தான் ஸ்டார்டிங் பாயின்ட் சார். சவீதா அஹல்யாவை பிடிக்காம தான் இந்த கேஸ் பத்தி பேசிட்டு இருந்தாங்க. ஆனால் அந்த மொட்டைக் கடிதம் வந்ததும் வேற யாரோ வேணும்னே கேஸ ரீ ஓபன் செய்ய வைக்குறாங்கன்னு புரிஞ்சது. சேகரன் பேக், போட்டோன்னு அஹல்யா பக்கமே சந்தேகம் வர மாதிரி பிரசாத் கொடுத்தப்போ சின்னதா சந்தேகம் வந்துச்சு. இரண்டாவது தடவை அதே ஹாஸ்பிட்டல்ல, எங்க கைல கிடைக்குற மாதிரி சேகரன் அஹல்யா பேரு இருக்க ஸ்டாம்ப் பேப்பர் கிடைச்சப்போ மேலோட்டமா பார்த்து அஹல்யாவை அரெஸ்ட் செய்யாமல் டீப்பா பார்க்கனும்னு முடிவு செய்தேன். கட்டாயம் இது வேணும்னே அஹல்யாவை மாட்டி விட செய்றதுன்னு தோணிச்சு. பிரசாத் ஹாஸ்பிட்டல் பத்தி முழுக்க விசாரிக்க டீம் கிட்ட சொல்லி இருந்தேன். பந்தோபஸ்த் ட்யூட்டி

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.