(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

ஆமாம், ஏன்?” என பதில் கேள்வி கேட்டாள் பவித்ரா.

  

வேண்டாம் பவி... ஏற்கனவே என்னால உங்க எல்லோருக்கும் ரொம்ப தொல்லை...”

  

நீ என்ன லூசா பாரு? சும்மா இது மாதிரி எல்லாம் உளறாம படுத்து தூங்கு...”

  

"நித்திலா??"

   

"அவ இன்னைக்கு பாட்டியோட தூங்குறாளாம்... நானும் எவ்வளவோ நேரம் கூப்பிட்டுப் பார்த்தேன்... வரவே மாட்டேன்னு சொல்லிட்டா..."

   

எந்த விதமான பொறாமையோ, கோபமோ இல்லாமல் பவித்ரா சொன்னது பாரதியை ஆச்சர்யப்படுத்தியது... அதற்கு மேல் எதுவும் பேசாமல் பாரதி படுத்துக் கொள்ளவும், பவித்ரா ஒரு புன்னகையோடு விளக்கை அணைத்து விட்டு படுத்தாள்.

  

🌼🌸❀✿🌷

   

லறிய அலாரத்தின் சத்தத்தில் கண்விழித்த பவித்ரா, அவளை ஒட்டியப்படி சிறுக் குழந்தைப் போல படுத்திருந்த பாரதியை பார்த்து புன்னகைத்தாள்! இரவில் ரொம்ப நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள், பவித்ரா மெதுவாக தட்டிக் கொடுக்கவும் தான் உறங்கிப் போனாள்... விவேக்கின் பிரிவு தோழியை அலைக்கழிப்பது பவித்ராவிற்கு புரிந்தது...

  

அதைப் பற்றி யோசித்துக் கொண்டே தன் வேலைகளை பார்க்க சென்றாள் அவள்...

   

பாரதி தூக்கம் கலைந்து கண் விழித்தப் போது நேரம் ஒன்பதை தாண்டி இருந்தது. அவ்வளவு நேரம் தூங்கியது அவள் தானா என்று நம்ப முடியாமல் எழுந்தவள், அவசர அவசரமாக பல் துலக்கி, குளித்து விட்டு பவித்ராவை தேடி சென்றாள்.

   

காலை சமையலை முடித்து, கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு, தன்னுடைய

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.