உண்மைன்னா, அவருக்கு நீ எங்கே போனா என்ன, எததனை நாள் போனா என்ன?”
“அதே தான் பவி... பொய் சொல்றதை சரியா சொல்ல தெரியுதா பாரு... சரியான...”
கணவனை திட்டுவதை வெளியில் கேட்காதவண்ணம் முணுமுணுத்த தோழியை பார்த்து புன்னகைத்தாள் பவித்ரா.
அதற்கு மேல் அவர்கள் பேச்சை தொடர விடாமல் லதா அவர்களை அழைத்து செல்ல வந்தாள்.
“நீங்க வந்து இருக்கீங்கன்னு சொன்னதும் லாவண்யா மேடம்க்கு ரொம்ப சந்தோஷம் மேடம்... வாங்க வாங்க...”
பதில் எதுவும் சொல்ல தோன்றாமல் லதாவை பின் தொடர்ந்தாள் பாரதி! பவித்ராவும் அவளுடனே நடந்தாள்.
எதிர்பட்ட பெரிய கதவை மெல்ல தட்டி விட்டு திறந்த லதா, பாரதியும், பவித்ராவும் உள்ளே செல்ல வழி விட்டு ஒதுங்கி நின்றாள்!
லதாவிற்கு நன்றி சொல்லிவிட்டு பாரதியும், பவித்ராவும் விசாலமான அந்த அறைக்குள் உள்ளே சென்றார்கள். எழுந்து நின்று முகம் மலர அவர்களை வரவேற்ற லாவண்யாவை பார்த்து இருவரும் பிரமித்துப் போனார்கள்! பாரதி லாவண்யாவை முன்பே ஒருமுறை பார்த்திருக்கிறாள். ஆனாலும் இவ்வளவு பக்கத்தில் பார்த்ததில்லை... எந்த விதமான மேக்கப்பும் இல்லாமலேயே லாவண்யாவின் அழகு சுடர் விட்டு பிரகாசித்தது.
“வாங்க வாங்க... உங்களை நேரா மீட் செய்றதுல ரொம்ப சந்தோஷம் பாரதி..." என பாரதியை மனமார வரவேற்ற லாவண்யா, "இவங்க...” என கேள்வியுடன் பவித்ரா பக்கம் பார்த்தாள்!
பாரதி இன்னமும் பிரமிப்பில் இருந்து முழுதாக வெளி வந்திருக்கவில்லை! ஆனால் ஓரளவிற்கு இயல்பிற்கு திரும்பி இருந்த பவித்ரா, தன்னை தானே அறிமுகப் படுத்திக்