(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

கொண்டாள்.

  

நான் பவித்ரா, பாரதியோட ஃப்ரென்ட்...”

  

ஓ பவித்ரா! உங்களைப் பத்தியும் கற்பகம் ஆன்ட்டியும், விவேக்கும் நிறைய சொன்னாங்க... உங்களையும் நேரா சந்திக்க முடிஞ்சதுல ரொம்ப சந்தோஷம்... உட்காருங்க...”

  

பாரதி பக்கம் ஒரு பார்வை பார்த்த பவித்ரா பின் லாவண்யா பக்கம் பார்த்து,

  

நாங்க ரெண்டுப் பெரும் ஷாப்பிங் வந்தோம்... பக்கத்தில தான் இந்த ஆஃபிஸ்னு உங்களை பார்க்க வந்தோம்... உங்களுக்கு தொல்லை எல்லாம் இல்லையே?” எனக் கேட்டாள்.

  

அதெல்லாம் ஒன்னுமில்லைங்க... இப்போ தானே இங்கே வந்திருக்கேன், செட்டில் ஆக இன்னும் கொஞ்சம் நாள் ஆகும்...”

  

அப்போது அலுவலக ஆள் பழச் சாறு கொண்டு வரவும்,

  

உங்க இரண்டு பேருக்கும் ஜூஸ் எடுத்துட்டு வர சொன்னேன், ஓகே தானே? வேற ஏதாவது வேணும்னா சொல்லுங்க...” என்றாள் லாவண்யா

  

அதுவே போதும் என்று பாரதியும், பவித்ராவும் ஜூஸை ஏற்றுக் கொண்டார்கள். பாரதியின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் குழப்பத்தில் இருந்தது... தன்னை தானே இயல்பாக்கி கொள்ள கண்களை சுழற்றியவள், லாவண்யாவின் மேஜை மீது இருந்த புகைப்படத்தை கவனித்தாள்...

  

ஆச்சர்யம் தோன்ற, “இது யாருங்க லாவண்யா?” என்றாள்.

  

பாரதி கை காட்டிய திசையை பார்த்து விட்டு,

  

என்னோட பசங்க பாரதி... அவங்க அப்பாவோட சிங்கப்பூரில் இருக்காங்க... இங்கே ஸ்கூல்ல அட்மிஷன் அரேன்ஜ் செய்துட்டு அழைச்சிட்டு வரனும்...” என்றாள் லாவண்யா!

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.