“என்ன?”
பாரதி, பவித்ரா இருவரும் அதிர்ச்சியோடு ஒரே நேரத்தில் கேட்க, லாவண்யா புரியாமல் அவர்களைப் பார்த்தாள்!
“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”
“இரண்டு பசங்க இருக்காங்களா?”
தொடர்ந்த பாரதி, பவித்ராவின் கேள்விகளை கேட்டு சிரித்த லாவண்யா,
“ஆமாம் கல்யாணம் ஆயிடுச்சு... இரண்டு பசங்க... சின்னவனுக்கு மூணு வயசாகுது, பெரியவனுக்கு ஆறு வயசு...” என அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தாள்!
பவித்ரா பாரதியை திரும்பிப் பார்த்து முறைத்தாள்!
நடப்பது ஒன்றும் புரியாமல், “என்ன ஆச்சு?” என்றாள் லாவண்யா குழப்பத்துடன்!
பாரதி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவே, பவித்ரா மீண்டும் நிலைமையை சமாளிக்க முயன்றாள்.
“நாங்க நீங்க ரொம்ப சின்னவங்கன்னு நினைச்சோம்... பாரதி உங்களை பார்த்துட்டு ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொன்னா, ஆனாலும் இவ்வளவு அழகா இருப்பீங்கன்னு எதிர்ப்பார்க்கலை... அது தான்...”
லாவண்யா பவித்ராவின் பேச்சை இயல்பாக எடுத்துக் கொண்டு மீண்டும் புன்னகை புரிந்தாள்!
“நான் மட்டும் தான் அழகா இருக்கேனா? நீங்க இரண்டு பேரும் கண்ணாடி பார்க்குறதே இல்லையா என்ன? உங்க இரண்டுப் பேரையும் பார்த்து நானும் தான் யோசிச்சுட்டு