இருந்தேன்... சரி, அதைப் பத்தி அப்புறம் பேசுவோம்... பாரதி, நீங்க எங்கே என்னை பார்த்தீங்க?”
லாவண்யாவின் கேள்விக்கு இப்போதும் பாரதி உடனே பதில் எதுவும் சொல்லவில்லை!
லாவண்யா அதையும் தவறாக எடுத்துக் கொள்ளாமல், எதையோ புரிந்துக் கொண்டவளாக கண்களை விரித்தாள்!
“ஓஹோ, அன்னைக்கு உங்க வீட்டு ஃபங்க்ஷன்ல என்னைப் பார்த்ததும் தான் காணாமல் போனீங்களா? விவேக் சொன்னான் என்னைப் பத்தி என்னவோ உங்க கிட்ட ரொம்ப பயங்கரமா சொல்லி வச்சிருக்கேன்னு... அது தானா இதுக்கு எல்லாம் காரணம்?”
லாவண்யா நட்பு கலந்து புன்னகை மின்ன பேசவும், பாரதி தன் மௌனத்தை உடைத்து பேசினாள்...
“அது... அதுக்கு பதில் சொல்றேன் லாவண்யா... ஆனால் அதுக்கு முன்னாடி முதல்ல நீங்க எனக்கு சொல்லுங்க, உங்களுக்கு விவேக்கை ரொம்ப நாளா தெரியுமா?”
என் கேள்விக்கு பதில் சொல்லாமல் நீ என்ன பதில் கேள்வி கேட்கிறாய் என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல், ஈசியாகவே பாரதிக்கு பதில் சொன்னாள் லாவண்யா!
“நாளா? எனக்கு அவனை ரொம்ப வருஷமாகவே தெரியும்... கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷமா விவேக்கை தெரியும். எங்க குடும்பம் மதுரையில் இருந்து இங்கே சென்னை வந்த நாள்ல இருந்தே தெரியும்...”
“ஓ! அவரும் நீங்களும் ஒரே காலேஜ்ல படிச்சீங்களா?”
“ஆமாம், ஒரே காலேஜ் ஆனால் வேற வேற டிபார்ட்மென்ட்... எதுக்காக இதை எல்லாம் கேட்குறீங்க பாரதி?”
லாவண்யாவின் கேள்வியில் விபரம் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் மட்டுமே இருந்தது!