தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 71 - பிந்து வினோத்
71. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பவித்ரா பாரதியே சொல்லட்டும் என நினைத்தவளாக அமைதியாக இருந்தாள்...
பாரதி சில வினாடிகள் கழித்து தான் பேசினாள்...
“அது வந்து... லாவண்யா... கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க... உங்க கல்யாணம் அரேன்ஜ்ட் மேரேஜா... இல்ல... லவ் மேரேஜா???”
பாரதி தயக்கத்துடன் மீண்டும் சம்மந்தமே இல்லாத கேள்வி கேட்ட போதும், லாவண்யா எந்த தயக்கமும் இல்லாமல் பதிலளித்தாள்!
“பாதி லவ் பாதி அரேன்ஜ்ட்! என்னோட ஹஸ்பன்ட் உங்க விவேக்கோட ஃப்ரென்ட்... அவருக்கு விவேக் தான் தூது... எனக்கு இந்த லவ் மேல எல்லாம் நம்பிக்கையே இல்லை... ஸோ, நான் அப்போ ஓகே சொல்லலை... அதை அப்படியே விடுற ஆளா என்ன விவேக்? எனக்கே தெரியாம என்னோட அப்பா கிட்ட பேசி, பெரிய பில்ட் அப் எல்லாம் கொடுத்து, எல்லா அரேன்ஜ்மென்ட்டும் செய்து அதை அரேன்ஜ்ட் மேரேஜா தெரியுற மாதிரி செஞ்சுட்டான்...“
பாரதி ஆச்சர்யமும், அதிசயமுமாக தலையை அசைத்தாள்... லாவண்யா தொடர்ந்தாள்...
“கல்யாணம் ஆன உடனேயே நாங்க சிங்கப்பூர் போக வேண்டியாதாச்சு, இவருடைய அம்மா அப்பா எல்லாம் அப்போ அங்கே இருந்தாங்க... எனக்குன்னு தனியா சில அம்பிஷன்ஸ் இருந்தது, அது விவேக்குக்கும் தெரியும், அது தான் ஆன்ட்டி எனக்கு அவங்க கம்பெனியிலேயே மேனேஜ்மென்ட் ரோல் கொடுத்ததற்கான காரணம்... அத்தையும் மாமாவும் இங்கே வந்து செட்டில் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு... இவர் தான் வராமல் அடம் பிடிச்சிட்டு இருந்தார்... இப்போ இந்த ஆப்பர்ச்யுனிட்டி கிடைச்ச உடனே நான் வந்தாச்சு, ஆட்டோமேட்டிக்கா அவரும் வருவார்... இனிமேல் இங்கேயே தான்...”
பாரதி யோசனையுடன் லாவண்யாவை பார்த்துக் கொண்டிருக்க, லாவண்யா,
“விவேக் மட்டும் இல்ல அவனுடைய குடும்பத்தில் எல்லோருமே எனக்கு ரொம்ப க்ளோஸ் தான்... உங்க கல்யாணத்துக்கு தான் வர முடியலை... ரொம்ப சாரி பாரதி... மத்தபடி, அவ்வளவு