(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தான் இந்த லாவண்யா விக்னேஷோட சுய புராணம்...” என புன்னகை மின்ன சொல்லி தன் பேச்சை முடித்தாள்!

  

பாரதியும், பவித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்!

  

அவர்களின் அமைதி லாவண்யாவிற்கு புதிராக இருந்திருக்க வேண்டும்...

   

என்ன விஷயம்ன்னு சொல்லுங்க பாரதி... நீங்க இவ்வளவு தயங்கவே வேண்டாம்... நான் எதையும் தப்பா எடுத்துக்க மாட்டேன்... உங்க முகத்தை பார்த்தா ரொம்பவே பெரிய விஷயம்னு புரியுது... என்னன்னு சொல்லுங்க...”

  

முதல்ல... ரொம்ப சாரிங்க லாவண்யா... நான் உங்களை பத்தி தப்பா நினைச்சுட்டேன்...”

  

குற்ற உணர்வுடன் பாரதி பேச, அவளை தேற்ற முயன்றாள் லாவண்யா.

  

தப்பா நினைச்சீங்களா? அது ஏன்?”

  

சாரிங்க... ஆமாம், தப்பா தான் நினைச்சேன்..."

  

மெல்லிய தயக்கத்துடன், சில மாதங்களுக்கு முன் விவேக் லாவண்யா பற்றி அவளிடம் சொன்னதை பகிர்ந்துக் கொண்ட பாரதி,

  

சாரி லாவண்யா! அவர் சொன்னதை தப்பா அர்த்தம் எடுத்துக்கனும்னு இல்லை. ஆனால் அவர் சொன்ன அந்த சிச்சுவேஷன் என்னை தப்பா நினைக்க வச்சிடுச்சு... சாரி...” என்றாள் வருத்தத்துடன்!

  

அடடா, இந்த விஷயத்துக்காகவா இத்தனை சாரி சொல்றீங்க? அவன் அன்னைக்கு சொன்னதுல நான் இப்போ தப்பா எடுத்துக்க என்ன இருக்கு? விவேக் உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்கான்... உங்களை இம்ப்ரஸ் செய்ய இப்படி எல்லாம் உங்க கிட்ட சொல்லி இருப்பான்... என்னோட ஃப்ரென்ட் தானே, போனால் போகுது... அவனுக்கு ஹெல்ப் செய்ய மதுவை காலேஜ்ல் இருந்து பிக்-அப் செய்ற ஐடியா கொடுத்து நான் ஹெல்ப் செய்யும் போது,

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.