(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

  

“உன் கோபத்தை தப்புன்னு சொல்ல முடியாது... ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும்...”

   

“அதுக்காக அந்த கோபத்தை உங்க கிட்ட காட்டினா எப்படி நியாயம்?” கிருத்திகா சட்டென்று கேட்டுவிடவும், கீதா அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்! ஆனாலும் உடனே சமாளித்துக் கொண்டு புன்னகை புரிந்தாள்!

   

“சரி, அதெல்லாம் பழைய விஷயம்... இப்போ எதுக்கு அது... உண்மையா சொல்ல போனா இப்போ நீ இப்படி பேசும் போது ஆச்சர்யமாவும், சந்தோஷமாவும் இருக்கு...”

  

கீதா அதே புன்னகை மின்ன சொல்லி முடிக்கவும், கிருத்திகா மனதில் ஊடுருவிய குற்ற உணர்வுடன் அமைதியாக இருந்தாள்!

  

அவளை ஒரு பார்வை பார்த்த மிருதுளா, அவளின் மனசுக்குள் ஏதோ குழப்பம் ஏற்பட்டிருப்பதை புரிந்துக் கொண்டாள். அதில் இருந்து கிருத்திகாவின் கவனத்தை திசை திருப்ப விரும்பி, யோசித்துப் பேசினாள்!

   

அது வேற ஒண்ணுமில்லை கீதா, இவளுக்கு அப்போ மண்டையில நட்டு ஏதாவது லூசா இருந்திருக்கும்... இப்போ அடிப் பட்டதுல எல்லாம் கரக்டா டைட்டாகி இருக்கும்... அது தான் இப்போ ஒழுங்கா பேசுறா...”

  

மிருதுளா எதிர்பார்த்ததைப் போலவே தன் யோசனையில் இருந்து வெளி வந்த கிருத்திகா அவளைப் பார்த்து முறைத்தாள்!

   

உங்களை அண்ணா பிசாசுன்னு நினைச்சா தப்பே இல்லை... ரொம்ப சரி!!!!”

    

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

    

தொடரும்...

Go to Rojavai thalattum thendral story main page

h

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.