தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 14 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஆர்த்தியை காருக்குள் ஏற சொல்லி அழைக்க வந்திருந்த குமாரின் காதிலும் ஆர்த்தி ராஜமிடம் சொன்னது விழுந்தது.
“ஆர்த்தி, என்னம்மா இது? இப்படி எல்லாம் பேச கூடாது...” குமார் உடனடியாக மகளை கண்டித்தார்!
ராஜம் அவரை தடுத்தாள்!
“இல்லை பரவாயில்லை, அவ சொல்றதும் சரி தானே? நான் தான் யோசிக்காம விட்டுட்டேன்...”
“இல்லைங்க...”
“பரவாயில்லை விடுங்க... நேரம் ஆகுது அடுத்த கோவிலுக்கு போகணுமே... அப்புறம் பேசுவோம்...”
குமாரிடம் சொல்லிவிட்டு மனம் முழுக்க குழப்பத்துடனே அவர்கள் வந்த வாடகை வேனில் ஏறினாள் ராஜம்! வேனின் உள்ளே இருந்த ஜான்வி, வர்ஷா, ப்ரியா, வைஜெயந்தி அனைவரும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வேனின் உள்ளே இருந்தாலும் அவர்களுக்கும் வெளியே நடந்த பேச்சு கேட்டு இருக்கும் என்பது ராஜமிற்கு புரிந்தது. ஆனாலும், யாரிடமும் எதுவும் சொல்லாமல் தன்னுடைய சீட்டில் மெளனமாக அமர்ந்தாள்.
அதற்கு அடுத்து அவர்கள் சென்ற கோவில்களில், விக்கிராந்தை ஆர்த்தியின் பக்கத்தில் நின்று இறைவனை தரிசிக்க சொல்லிவிட்டு கணவர் மற்றும் வர்ஷாவின் அருகில் நின்றாள் ராஜம்.
🌼🌸❀✿🌷
“ராஜம், அந்த ஆர்த்தி தான் உன் மருமகன்னு முடிவு செஞ்சாச்சா?”
தயக்கத்துடன் தான் வைஜெயந்தி அந்த கேள்வியை கேட்டாள்.