(Reading time: 22 - 43 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

தொடர்கதை - திருமதி அகத்தியன் - 06 - சசிரேகா

   

டைனிங் டேபிளில் நாச்சியா சொன்ன அனைத்து உணவுகளும் சுடசுட ஆவிப்பறக்க தயாராக வைக்கப்பட்டிருந்தது. வேலையாட்களும் அனைவரிடமும் உணவு தயாராக இருக்கிறது என தகவலும் சொன்னார்கள். அதனால் இன்றைய பொழுதில் நடந்த அனைத்து சம்பவங்களால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான சங்கமேஸ்வரன் முதல் ஆளாக சாப்பிட வந்தார், அவரை தொடர்ந்து பொன்முடி, கலாவதி, அங்கமுத்து, ரூபாவதி என வந்தார்கள், அகத்தியனோ நாச்சியாவை உடன் அழைத்து வந்தான், நாச்சியாவோ தனது தாய் தந்தையை அழைத்து வந்தாள். அனைவரும் டைனிங் டேபிள் முன் வந்த உடன் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டார்கள் சங்கமேஸ்வரனோ

  

”ஆமா இவங்க எதுக்கு இங்க வர்றாங்க” என நாச்சியாவின் தாய் தந்தையை பார்த்து அகத்தியனிடம் கேட்க அவனோ

  

”டைனிங் டேபிளுக்கு எதுக்கு வருவாங்க, சாப்பிடத்தான் வருவாங்க” என இயல்பாக சொல்லியவன் நாச்சியாவின் தந்தை தாயிடம்

  

”அத்தை மாமா உட்காருங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்” என சொல்லியதோடு விடாமல் அவர்களுக்கென இருக்கைகளை வேறு காட்டினான். அதில் பொன்முடி உக்கிரமாகி

  

”அகத்தியா நீ என்ன காரியம் செய்றேன்னு புரியுதா இல்லையா”

  

”என்னப்பா சொல்றீங்க”

  

”அவங்களை போய் நமக்கு சரிக்கு சமமா உட்கார வைக்கற, அறிவிருக்கா உனக்கு”

  

”அப்பா அவங்க என்ன யாரோவா, என்னோட மாமனார் மாமியார் உங்களுக்கு சம்பந்தி முறையாகனும், இதுகூட உங்க அறிவுக்கு எட்டலையாப்பா”

  

என சொல்ல சங்கமேஸ்வரனோ

  

”அவங்க யார்ன்னு தெரியுமா, கீழவீதியாளுங்கடா முட்டாள், அவங்களை எப்படி நம்ம கூட

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.