(Reading time: 7 - 14 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

அவளுக்கு அவர்களுக்குள் என்ன சச்சரவு என்றும் தெரியவில்லை! அந்த சண்டைக்கு யார் காரணம் என்றும் தெரியவில்லை! தெரியாத ஒன்றை சரி செய்வது எப்படி???

  

கிருத்திகாவிற்கு விடை தெரியவில்லை!

  

கிருத்திகாவின் மனம் மின்னல் வேகத்தில் தன் பாட்டிற்கு யோசிக்க, ரங்கராஜனின் பேச்சை கவனித்திருந்த மிருதுளா, அவளின் அருகே இருந்த கீதாவிடம்,

  

யாரு, இவளா குழந்தை???” என்று கிசுகிசுத்தாள்.

  

அது கீதாவின் மறுபக்கம் இருந்த கிருத்திகாவின் காதிலும் விழுந்தது... தற்காலிகமாக தன் எண்ணங்களுக்கு கடிவாளம் போட்டவள், மிருதுளாவிடம்,

  

உங்களுக்கு ஏன் பொறாமை?” என்றாள் பதிலுக்கு!

  

"பொறாமையா எனக்கா???? ஏதோ பாசத்தில செல்லம் கொஞ்ச வேண்டியது தான், அதுக்காக உன்னை மாதிரி ஒருத்தியை பார்த்து குழந்தைன்னு சொன்னா என்ன செய்றது?” மிருதுளா கண்களை உருட்டிக் கொண்டு கேலி மின்ன சொன்னாள்!

  

ஒன்னும் செய்யாமல் அமைதியா இருக்கிறது தானே, என்றாள் கிருத்திகா ஏட்டிக்குப் போட்டியாக!

  

"அதை தான் செய்யனும், வேற என்ன செய்ய முடியும்! என்னோட ஜோடியை தான் என் கிட்ட இருந்து பிரிச்சு அனுப்பிட்டீயே!"

  

"ரொம்ப புலம்பினீங்கன்னு வைங்க... அண்ணா கிட்ட உங்களை இங்கே எனக்கு துணையா விட்டுட்டு அவரை மட்டும் வேரூர் கிளம்பி போக சொல்லிடுவேன்...!" கிருத்திகா போலியாக மிரட்டும் பாவனையில் சொல்ல,

  

"அடிப்பாவி... ரொம்ப நல்ல பொண்ணு தான் நீ...! தெரியாமல் சொல்லிட்டேன்ம்மா... உங்க

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.