(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

“...அந்த கம்பெனி டைரக்டர் சுதர்ஷனுக்கு உன் மேல அப்படி ஒரு அபிமானம்... உன்னை நம்பி எந்த பெரிய ப்ராஜக்ட் வேணா கொடுக்கலாம்ன்னு சித்தப்பா கிட்ட சொல்வார்...”

  

, அப்போ அவர் அப்பாவுக்கு தெரிஞ்சவரா???”

  

“இல்லை இல்லை... உன் வழியா தான் அவங்க இரண்டு பேருக்கும் பரிச்சயம்... ஒன்னு சொல்லனும் பிரின்சஸ், உன்னை நாங்க எவ்வளவு மிஸ் செய்தோமோ அதே அளவு அந்த கம்பெனிகாரங்களும் மிஸ் செய்திருப்பாங்க... இப்போ மட்டும் நீ வந்தது தெரிஞ்சா அவ்வளவு தான்...”

  

அவங்க வந்தாலும் என்னால ஒரு யூசும் இல்லைண்ணா... அதை விடுங்க வேற ஏதாவது சொல்லுங்க...”

  

வேற என்ன???? ம்ம்ம்ம்ம்ம்... தியாகு எனக்கு ஒரு ஃப்ரென்ட் வழியா அறிமுகம் ஆனான்... எங்க இரண்டு பேருக்கும் நடுவில நல்ல கெமிஸ்ட்ரி, சீக்கிரமே நல்ல ஃப்ரென்ட்ஸ் ஆகிட்டோம்...”

  

கணவனை பற்றி விஜய் சொல்ல ஆரம்பிக்கவும், ஆர்வத்துடன் கேட்க தொடங்கிய கிருத்திகா, அவன் சொன்ன ‘கெமிஸ்ட்ரி’யில் கடுப்பாகி அவனைப் பார்த்து முறைத்தாள்.

  

ஆனால் விஜய் அதை பார்க்காமல் தன் பேச்சை தொடர்ந்தான்...

  

ஒரு நாள் தியாகு வீட்டுல தான் கீதாவை மீட் செய்தேன்...”

  

கண்கள் பளபளக்க அவன் சொல்ல, கிருத்திகா இப்போது மேலும் கோபம் பொங்க அவனைப் பார்த்து முறைத்தாள்.

  

ஆனால் அது எதுவும் விஜயை அசைக்கவில்லை...

  

அவன் ஏதோ டைம் மெஷினில் ஏறி அந்த நாளுக்கே சென்று விட்டவனைப் போல

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.