“ஆமாம் நானும் தியாகுவும் அந்த திண்டுக்கல் பிரியாணி சாப்பிட்டு சாப்பிட்டு வெயிட் போட்டது தான் மிச்சம் மத்தபடி பலன் ஜீரோ தான்... கீதா என்னை பார்த்தால் ஒரு சாதாரண ஸ்மைல் மட்டும் கொடுப்பா அவ்வளவு தான்... வேற ஒன்னுமே இல்லை...”
“க்கும் வேற என்ன கொடுப்பாங்க???? அடி தான் கொடுத்திருக்கனும்...”
“ப்ச்... போ பிரின்சஸ்... லவ் செய்றதும் அதை சொல்லாமல் தவிப்பதும் போல ஒரு சுகமான அவஸ்தை இல்லை தெரியுமா... என்னவோ உலகமே புதுசா தெரியும்...”
“ஹையோ...!”
“சரி சரி... கேளு... ஒருவழியா எங்க கல்யாணம் ஃபிக்ஸ் ஆச்சா...”
“ஸ்டாப் ஸ்டாப், என்ன நீங்க டைரக்ட்டா கல்யாணத்துக்கு போயிட்டீங்க, எப்படி உங்க மேரேஜ் ஃபிக்ஸ் ஆச்சு???”
“எல்லாம் அரேஞ்ச்ட் மேரேஜ் தான்...”
“என்னது அரேன்ஜ்ட் மேரேஜா??? அது எப்படி???”
“அதை ஏன் கேட்குற... நான் ஹை ஜம்ப், லாங் ஜம்ப் எல்லாம் குதிச்சுப் போய் ப்ரொபோஸ் செய்தா, கீதா கூலா அம்மா அப்பா கிட்ட பேசுங்கன்னு சொல்லிட்டா... அவங்க அப்பா மிலிட்டரி ஆஃபிசர் மாதிரி இருப்பார்... அவர் கிட்ட எங்கே போய் நேரா பேசுறது? நம்ம தோஸ்த் தியாகு கிட்ட நான் விஷயத்தை சொல்ல, அவன் என் பேரை கீதா வீட்டுல சொல்ல, மெல்ல கல்யாண பேச்சு ஸ்டார்ட் ஆகி, எல்லாம் சரியா நடந்துடுச்சு...”
“லக்கி மேன் நீங்க... ஹை ஜம்ப், லாங் ஜம்ப்ன்னா, அண்ணி வீட்டு காம்பவுன்ட் சுவரேறி குதிச்சுப் போய் ப்ரொபோஸ் செய்தீங்களா????”
விஜய் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்...