(Reading time: 7 - 14 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 14 - Chillzee Story

   

This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.

  

"த்தை நான் சொன்ன என் அண்ணன் ஸ்ரீனிவாஸ் இவர் தான்." ஐஸ்வர்யா கோட் சூட் அணிந்து அமர்க்களமாக காட்சி அளித்த இளைஞனை கலைவாணிக்கு அறிமுகப் படுத்தினாள்.

  

ஸ்ரீனிவாஸ் அடக்கமாக புன்னகை புரிந்து, "வணக்கம்மா," என்றான்.

  

"உட்காருப்பா. ட்ராவல் கஷ்டமா இல்லையே. புதுசா வரவங்களுக்கு எங்க எஸ்டேட் கண்டுப்பிடிச்சு வரது கொஞ்சம் கஷ்டம்," என விசாரித்தாள் கலைவாணி.

  

"எஸ்டேட் ஈசியா கண்டுப்பிடிச்சுட்டேன். உள்ளே வந்தப்புறம் சிக்னல் சரியா இல்லை. அதுக்கு மேல வழியில பார்த்தவங்களை விசாரிச்சு வீடு கண்டுப்பிடிச்சு வந்தேன்," என்றான் ஸ்ரீனிவாஸ் ஈஸியாக.

  

"இந்த பக்கமா புது மொபைல் டவர் வைக்க சொல்லி கேட்டு இருக்கேன். வச்சாங்கன்னா நல்லா இருக்கும். இவங்க இரண்டுப் பேரும் என் பசங்க. ராகுலை உங்களுக்கு ஏற்கனவே தெரியும்னு நினைக்கிறேன். இவ என் பொண்ணு ப்ரியம்வதா," கலைவாணி ஸ்ரீனிவாசை ப்ரியம்வதாவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

  

ப்ரியம்வதா மரியாதைக்காக கூட ஸ்ரீனிவாஸ் பக்கம் பார்க்கவில்லை. கையிலிருந்த செல்ஃபோன் தான் அவளின் உயிர் நாடி என்பதுப் போல அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

  

கலைவாணிக்கு கோபம் வந்தது. ஆனால் அதை வெளிக்காட்ட அவசியமே இருக்கவில்லை.

  

ஸ்ரீனிவாஸ் அவனே எழுந்து ப்ரியம்வதா பக்கத்தில் சென்றான். அவள் கையிலிருந்த ஃபோனை கவனமாக நோட்டம் விட்டான்.

  

"இது சாம்சங் லிமிட்டட் எடிஷன் தானே? உங்களுக்கு நல்ல டேஸ்ட். எனக்கும் இந்த மாடல் பிடிக்கும். அன்ஃபார்ச்சுனேட்லி நான் வாங்குறதுக்குள்ளே எல்லாம் வித்து முடிஞ்சிடுச்சு," என்றான் ஸ்ரீனிவாஸ்

  

ப்ரியம்வதா அவனை ஆச்சர்யமாக நிமிர்ந்துப் பார்த்தாள். ஸ்ரீனிவாஸ் நட்புடன் புன்னகைத்தான்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.