சொல்லி இருக்கா...”
“கட்டாயம் போகனும் ஆனந்த்... நானும் அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்...”
“போகலாம் போகலாம்... இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே பேசி வேஸ்ட் செய்றது ரதி... நீ என்னை மன்னிச்சிட்ட தானே?”
“நமக்குள்ளே என்ன மன்னிப்பு எல்லாம்? ஆனால், எனக்கு ஒரே ஒரு சத்தியம் மட்டும் செஞ்சுக் கொடுங்க...”
“சொல்லுடா, நீ கேட்டு நான் இல்லைன்னு சொல்வேனா?”
“இனி மேல் எப்போவும் என் கிட்ட இருந்து எதையும் மறைக்கவே கூடாது... உங்க மனசுல இருக்குறதை உண்மையா என் கிட்ட ஷேர் செய்யனும்...”
விவேக் யோசிப்பதாக பாவ்லா செய்தான்!
“என்ன ஆனந்த் யோசிக்குறீங்க??”
“கஷ்டமான ப்ராமிஸா இருக்கே ரதி...”
“ப்ச் ஆனந்த்...”
“சரி பாரதி மேடம், ப்ராமிஸ்...! உன் கிட்ட எதையும் மறைக்கலை... இப்போவே இந்த ப்ராமிசை செயல்படுத்த ஆரம்பிப்போமா?”
விவேக் சொன்ன விதத்திலேயே ஏதோ விவகாரமாக சொல்ல போகிறான் என்பதை உணர்ந்து சந்தேகமாக பார்த்தாள் பாரதி. அவளின் சந்தேகம் சரி என்பது போல்,
“இப்போ என் மனசில இருக்குறது எல்லாம், இரண்டு மாசமா நான் லூசு மாதிரி இருந்தது போதாதுன்னு, இந்த லூசு பொண்ணு வேற இன்னமும் இப்படி பேசியே நேரத்தை வேஸ்ட்