“எனக்கு திடீர்னு பிரியாணி சாப்பிடனும் போல இருந்தது... நீங்க வேற நான் என்னவோ உங்களை மயக்க சமைச்சு கொடுக்குறதா நினைச்சிடக் கூடாது பாருங்க... அதனால நான் எனக்குன்னு கொஞ்சமா தான் செய்தேன்... வாசனை சூப்பரா இருக்கே, டேஸ்ட்டும் நல்லா தான் இருக்கும்னு நினைக்கிறேன்... நீங்க என்ன நினைக்குறீங்க?’
“ம்ம்ம்ம்...! கீர்த்தி...”
“சொல்லுங்க...”
“உன் பிரியாணில கொஞ்சோண்டு நான் டேஸ்ட் செய்து பார்க்கலாமா???”
அப்படி வாங்க சார் வழிக்கு!!!! மனதினுள் சொல்லிக் கொண்டவள்,
“சாப்பிடுங்க... உங்களுக்கு என் சமையல் பிடிக்குமான்னு தெரியலை...” என்றாள்.
“பிடிக்காம என்ன? அம்மா வீட்டுல பிரியாணி செய்ய மாட்டாங்க... பொதுவா ஹோட்டல்ல சாப்பிடுறது தான்... ரொம்ப அதிசயமா தான் இப்படி வீட்டு பிரியாணி கிடைக்கும்... நான் ஃபாஸ்ட்டா ஃப்ரெஷ் அப் ஆகிட்டு வரேன்... சூடா சாப்பிடலாம், அப்போ தான் டேஸ்ட் நல்லா இருக்கும்...”
ஆர்வத்துடன் படபட என பேசியவனை ஆச்சர்யமாக பார்த்தப் படி அவள் சரியென தலை அசைக்க, வேகமாக மாடிப்படி ஏறி சென்றான் தியாகராஜன்!
🌼🌸❀✿🌷
“இன்னும் கொஞ்சம் சாப்பிடுறீங்களா?”
தியாகராஜன் அமர்ந்திருந்த நாற்காலியின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கிருத்திகா, மறக்காமல் அவனை உபசரித்தாள்.