(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 80 - பிந்து வினோத்

80. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ல்லோரும் இந்த பஜ்ஜியை சாப்பிட்டுட்டே பேசுங்க!” சுட சுட பஜ்ஜியை தட்டில் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தாள் பவித்ரா.

  

ஒன்றிரண்டு நிமிடங்களில் மொத்த தட்டும் காலி ஆகி விட, “ரொம்ப நல்லா இருக்கு பவித்ரா, நீயே செய்ததா? கடையில் வாங்குறது கூட இவ்வளவு டேஸ்டீயா இல்லை,” என புகழ்ந்தாள் கற்பகம்.

  

ஆமா, என் மருமகள் செய்ற சமையல் எல்லாமே நல்ல சுவையா இருக்கும்,” என கமலாவும் சொன்னாள்!

  

தொடர்ந்து எல்லோரும் பேசிக் கொண்டே இருக்கவும், “இப்படியே பேசிட்டு இருந்தா கடைக்கு எப்போ போறது?” என்று அலுத்துக் கொண்டார் நரேந்திரன்.

  

கடைக்கா?” என்று கேள்வியோடு அம்மாவை பார்த்தான் விவேக்.

  

ஆமா விவேக்... உங்க அப்பா அதிசயமா இன்னைக்கு ஃப்ரீயா இருந்தார். சும்மா ஷாப்பிங் போகலாம்னு நினைச்சோம்... உங்க கல்யாணத்துக்கு அப்புறம் பாரதிக்கு எதுவுமே நாங்க வாங்கி தரலை, அதனால அவளையும் அழைச்சிட்டு கடைக்கு போகலாம்னு தான் இங்கே வந்தோம்,” என விளக்கம் கொடுத்தாள் கற்பகம்!

  

ஓ!”

  

இன்னைக்கு அந்த ப்ரோக்ராமை கான்ஸல் செய்துருவோம் அப்பா... எல்லோரும் இப்படி ஒன்னா இருந்து சந்தோஷமா பேசி எத்தனை நாள் ஆச்சு,” என்றாள் மது.

  

ஆமாம் நரேன், இன்னொரு நாள் போகலாம்,” என கற்பகம் சொல்ல,

  

சரி உங்க இஷ்டம்,” என ஏற்றுக் கொண்ட நரேந்திரன், பவித்ராவிடம், “பவித்ரா, இன்னைக்கு உன்னோட சமையல தான் ஒரு வெட்டு வெட்டு போறேன்,” என்றார்.

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.