“உங்களுக்காகவே ஸ்பெஷலா குக் செய்றேன் சார்,” என்றாள் பவித்ரா புன்னகையுடன்!
🌼🌸❀✿🌷
பவித்ராவிற்கு சமைக்க தேவையானதை கமலா வாங்கி கொடுக்க, உமாவும், பாரதியும் மற்றபடி உதவினார்கள். நித்திலா மற்றும் நிதயாவுடன் விளையாடிக் கொண்டிருந்த மதுவை கவனித்த உமா,
“மதுவை பார்த்தீங்களா? எப்படி சின்னக் குழந்தை மாதிரி விளையாடிட்டு இருக்கான்னு... ஆனால் அப்பப்போ பெரிய பொண்ணு போலவும் பேசுறா...” என்றாள்!
மது கண்களை உருட்ட,
“மதுவா? அவ இன்னும் சின்ன பொண்ணு தானே உமா?” என்றாள் பாரதி.
“தேங்க் யூ சின்ன அண்ணி,” என்றாள் மது பெரிய புன்னகையோடு.
“சிரிப்பை பார்த்தீயா!!!! உனக்கு தெரியாது பாரதி, இரண்டு நாளுக்கு முன்னாடி மது பேசினதை கேட்டு, நான் மட்டும் இல்ல அத்தை மாமா எல்லோரும் கூட ஷாக் ஆகிட்டாங்க...”
“அப்படி என்ன சொன்னா அவ?”
மது பாரதிக்காக பேசியதை முழுதுமாக விவரித்தாள் உமா.
“பரவாயில்லையே மது, நீ அப்படி எல்லாம் கூட பேசுவீயா?” என்றாள் பவித்ரா ஆச்சர்யமாக.
“எனக்கும் அதே ஆச்சர்யம் தான் பவி,” என்றாள் உமா.
“ரொம்ப தேங்க்ஸ் மது... உனக்கு என் மேல எவ்வளவு அன்பு,” என்றாள் பாரதி!