(Reading time: 16 - 31 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

கட்டாயப்படுத்தினா நாங்க இந்த வேலையை விட்டுடுவோம்னு மிரட்டலாம்னு கேஸ் பைல் கொண்டு வந்து பார்த்தா அதுக்குள்ள பேய்கள் கூட்டமா நின்னு பேசிக்கிட்டு இருக்கு, நடுவில போனா நம்ம கதை கந்தலாயிடும்னுதான் ஒளிஞ்சிருந்து என்ன நடக்குதுன்னு பார்த்தேன் அப்பப்பா என்ன கொலைவெறியா இருக்காங்க பாரேன் எனக்கே பயம் வந்துடுச்சி” என நடந்ததை சொல்ல பயத்துடனே இருந்த நாச்சியா அகத்தியனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்

  

”பயப்படாத அகத்தியா நமக்கு எதுவும் ஆகாது” என சொல்ல அவனும் அவளை ஆதரவாக தட்டிக் கொடுத்துவிட்டு அவளை தள்ளி அமரவைத்தான்

  

”ஆமா இங்க எதுக்காக நாம வந்திருக்கோம்“

  

”இங்கதான் பேய்கள் வராது”

  

”அதுக்காக இங்கயே எவ்ளோ நேரம் இருக்க முடியும்”

  

”தெரியலை நாச்சியா பொறு பார்க்கலாம்” என சொல்லியவன் எதேச்சையாக வெளியே பார்க்க அங்கு கமிஷனர் காத்துக் கொண்டிருந்தார் கோபமாக

  

”நாச்சியா நாச்சியா அங்க பாரு கமிஷனர் நிக்கறான்” என பதறிக் கொண்டு சொல்ல  நாச்சியாவும் வெளியே பார்த்து பயந்து நடுங்கி அவனை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்

  

”காப்பாத்து அகத்தியா என்னை இவன்கிட்டயிருந்து காப்பாத்து”

  

“என் உசுரை கொடுத்தாவது உன்னை நான் காப்பாத்துவேன் பயப்படாத”

  

”ஆமா அவன் ஏன் வெளியவே இருக்கான்”

  

”அவனுக்குள்ள பேய் இருக்கு அதான் அவனால கோயிலுக்குள்ள நுழைய முடியலை“

  

”ஓ அப்படியா ஆமா எனக்குள்ள இருந்த 2 பேய்கள் எங்க போச்சி”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.