”வா அகத்தியா உனக்காகதான் காத்திருக்கேன்” என கார்கோடகன் மற்றும் சங்கமேஸ்வரன் என இருவரின் குரலில் பேசி வைக்க அதைக்கேட்டு அரண்டான் அகத்தியன், அதைக்கேட்ட நாச்சியாவிற்கும் திக்கென்றது அவசரப்பட்டு அகத்தியனை அனுப்பிவிட்டோமோ என பயந்து
”அகத்தியா உள்ள வா” என அழைக்க அதற்குள் கமிஷனர் அகத்தியனை பிடித்துவிட அவன் அலறினான். உடனே கமிஷனரை நாச்சியாவின் மற்ற இரு உருவங்களும் பிடித்துக் கொண்டு
”ஓடு ஓடு” என இரண்டு பேரின் குரலாக இரண்டாக கேட்க அகத்தியன் மிரண்டு கோயிலுக்குள் இருந்த நாச்சியாவை பார்த்து
”வா”
”நான் வரலை எனக்கு பயமாயிருக்கு“
”அட வா உள்ளயே இருக்க முடியாது, கோயிலை பூட்டுவாங்க வா”
”நான் வெளிய வந்தா பேய் என்னை பிடிச்சிக்கும்”
”பிடிச்சாதான் நல்லது இல்லன்னா அந்த கார்கோடகன் உன்னை விடமாட்டான் சீக்கிரமா வா” என அலற அவளும் அவன் சொன்னது சரிதான் என நினைத்து உடனே கோயிலை விட்டு வெளியேற அவள் உடலில் இரு நாச்சியாவின் பேய்கள் நுழைந்தது, அதில் அவளுக்கு அதீதபலம் கிடைத்தது, அந்த பலத்தில் கமிஷனரை தள்ளிவிட கமிஷனரோ தூரமாக சென்று விழுந்தான். உடனே அவள் அகத்தியனை பார்த்து
”இங்கிருந்து போகலாம்”
”போறதா எங்க போறது”
”இந்த கதை ஆரம்பிச்ச இடத்துக்கேதான் போகனும்”