(Reading time: 16 - 31 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”உங்க பிறவியிலயே உங்க ஆசை நிறைவேறலை, இதுல பேய்கள் போல வந்து உங்க ஆசையை நிறைவேத்திக்கப் பார்க்கறீங்களே வெட்கமாயில்லை”

  

”ஏய் ரொம்ப பேசாத அந்த உயில் பத்திரம் எங்க” என சங்கமேஸ்வரன் ஆவி கேட்க அதற்கு நாச்சியாவோ

  

”முட்டாளா நீ, அந்த உயிலை பத்தி எனக்கென்ன தெரியும் கொஞ்சம் நேரம் பொறுமையா இரு, அகத்தியனை காப்பாத்த போயிருக்கற இரண்டு நாச்சியா பேய்கள் வந்ததும் அவங்ககிட்டயே கேட்டுக்க சரியா” என சொல்ல சங்கமேஸ்வரன் அமைதியாக கார்கோடகன் விழித்துக் கொண்டான்

  

”அப்படின்னா நான் என்னோட ஆசையை நிறைவேத்திக்கறேன், உன்னை காப்பாத்த யாராலயும் முடியாது நாச்சியா” என வெறியுடன் அவளை நெருங்க அவளோ உள்ளுக்குள் பயந்தாலும் உடனே

  

”இதப்பாரு என்னை நீ அடைய வந்தா, நான் தற்கொலை செய்து செத்துடுவேன், இதனால யாருக்கும் பிரயோசனம் இல்லை யோவ் சங்கமேஸ்வரா உனக்கும் சேர்த்துதான் சொல்றேன், நான் உயிரோட இருந்தாதான் உன்னால அந்த உயிலை அடையமுடியும் என்னை நீதான் காப்பாத்தனும்” என சொல்லிவிட கார்கோடகன் வியந்தான் சங்கமேஸ்வரன் வெளிவந்தான்.

  

இப்போது இரு பேய்களும் சண்டையிட்டுக் கொண்டது கார்கோடகன் பேய் நாச்சியாவை அடைய துடிக்க சங்கமேஸ்வரனோ உயிலுக்காக நாச்சியாவை காப்பாற்ற கார்கோடகனிடமே சண்டையிட்டது

  

இரு பேய்களும் சண்டையிட்டுக் கொள்வதைக் கண்டு நிம்மதியான நாச்சியா நைஸாக அவ்விடம் விட்டு விலகி வேறு பக்கம் சென்றாள்.

  

கும்மிருட்டாக இருந்த அந்த பெரிய வீட்டில் எங்கு செல்வது என தெரியாமல் இருட்டில் தடுக்கி விழுந்து எழுந்தபடியே சத்தம் வராமல் நடந்தாள் நாச்சியா

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.