(Reading time: 16 - 31 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”எல்லாமே என் தப்புதான் மக்களை ஒண்ணாக்கனும்னு ஆசைப்பட்டேன், ஊரை ஒண்ணாக்கனும்னு ஆசைப்பட்டேன் ஆனா, மக்கள் ஒண்ணு சேர்ந்ததும் அவங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்க கூடாது என்னோட ஆசைதான் உங்க இறப்புக்கு காரணம் நீங்க தண்டிக்கறதா இருந்தா என்னை தண்டிங்க” என சொல்ல 100 ஆவிகளும் திடுக்கிட்டு விலகி நின்றது

  

”ஏன் விலகிப்போறீங்க ஊரை ஒண்ணாக்க நினைச்ச எனக்கு இந்த மேலவீதியாளுங்க மனசை புரிஞ்சிக்க தெரியலை, கார்கோடகன் இந்தளவுக்கு அநீதி செய்வான்னு எனக்குத் தெரியாது, மக்களுக்கு நல்லது செய்ய நான் எவ்வளவோ வேலைகள் செய்தேன், அது உங்களுக்கும் தெரியும், உங்களை நான் நல்லபடியா பார்த்துக்கிட்டேன், ஏன் நான் இறந்தபின்னாடி கூட உங்க குடும்பங்களை நான் கைவிடலை, எங்களோட சொத்தை வைச்சி நாங்க உங்க குடும்பத்தாளுங்களைப் பார்த்துக்கிட்டோம், உங்களோட கோபம் எனக்குப் புரியுது ஆனா, நீங்க தண்டிக்கனும்னா அதுக்கு காரணமா இருக்கற ஆளுங்களை தண்டிங்க, பாவம் அகத்தியனை தண்டிக்க வேணாம்” என்றாள் நடுத்தர வயது நாச்சியா சொல்ல அதைக்கேட்ட அந்த 100 ஆவிகளும் சட்டென மறைந்துவிட்டது அதைக்கண்ட அகத்தியனுக்கு ஆச்சர்யமாக இருந்தது

  

”எப்படி ஒரே நொடியில எல்லாமே மறைஞ்சிடுச்சி”

  

”அவங்களோட கோபத்தை நாங்க குறைச்சிட்டோம், பாவம் அவங்க வாழவேண்டியவங்க இப்படி அநியாயமா இறந்ததால இத்தனை வருஷமும் அவங்க ஆத்மா சாந்தியாகாம இங்கயே ஆவிகளா சுத்திக்கிட்டு இருந்தது. அவங்களோட முக்திக்கான வழி உன்னை கொன்னாதான்னு தப்பா நினைச்சிக்கிட்டாங்க ஆனா, இப்ப நாங்க விளக்கம் சொன்னதும் அவங்க புரிஞ்சிக்கிட்டாங்க எப்ப அவங்க புரிஞ்சிக்கிட்டாங்களோ இனி அவங்க ஆத்மா சாந்தியாயிடுச்சி”

  

”அப்படியா அப்ப 100 ஆவிகளோட ஆத்மாவும் சாந்தியாயிடுச்சா”

  

”ஆமாம்”

  

”அப்ப நீங்க எப்ப சாந்தியாவீங்க ஆமா, நீங்க என்ன இங்க இருக்கீங்க என் மனைவி நாச்சியா 

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.