(Reading time: 16 - 31 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

எங்க”

  

”அவளை எங்க வீட்ல விட்டிருக்கோம்”

  

”அடிப்பாவிங்களா உங்களை நம்பி நான் அவளை விட்டா இப்படி அவளை நிர்கதியா விட்டுட்டு வந்துட்டீங்களே“

  

”எங்களை திட்டாத நாச்சியாதான் எங்களை இங்க அனுப்பி வைச்சா, உன்னை காப்பாத்த சொன்னா அதான் வந்தோம்“

  

“நாச்சியாவுக்கு என் மேல அன்பு அதிகம், அதுக்காக அவளை ஆபத்தில விடமுடியாதே கார்கோடகன் வெறிபிடிச்சி அலையறான், சங்கமேஸ்வரன் கொலைவெறியோட அலையறான், அவங்களை எப்படி அடக்கறது” என கேட்க நாச்சியாவின் இரண்டு ஆவிகளும் திருதிருவென விழிக்க கடுப்பானான் அகத்தியன்

  

”நீங்களும் ஒரு பேய்களா, போய் கெட்டவங்களை அழிக்கறதை விட்டுட்டு திருவிழால காணாம போன பிள்ளைகளை போல திருதிருவென விழிச்சா என்ன அர்த்தம், இது சரியா வராது உங்களை நம்பினா நான் நாச்சியாவை இழந்துடுவேன், முதல்ல சங்கமேஸ்வரனை அடக்கனும் ஆமா அந்த உயில் எங்கதான் இருக்கு” என கேட்க அதற்கு நடுத்தரவயது நாச்சியாவோ

  

”அதை பத்திரமா ஆண்டாள் நாச்சியாரோட பட பிரேம்க்குள்ள வைச்சிருக்கேன்”

  

”அது எங்க இருக்கு”

  

”வீட்ல”

  

”சரி வாங்க அங்கயே போகலாம்”

  

”அவசரப்படாத அகத்தியா அந்த உயில் மக்களுக்கானது, அதை நீ சங்கமேஸ்வரன்கிட்ட கொடுத்தா அவன் அதை அழிச்சிடுவான் பாவம் மக்களுக்கு சொத்துக்கள்  சேராம போயிடும்“

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.