(Reading time: 16 - 31 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”அய்யோ பேய்களையும் கூடவே கூட்டிட்டுப்போறேனே நாச்சியாவுக்கு பரவாயில்லை அவளை காப்பாத்த அவளோட முன்ஜென்மத்து 2 பேய்கள் இருக்கு என்னை காப்பாத்த யாரு இருக்கா”

  

”உன்னைக் காப்பாத்த நான் இருக்கேன்” என அவனது மனைவி சொல்லவும் மனம் மகிழ்ந்தான் அகத்தியா

  

”நாச்சியா“ என அசடு வழிய அவளோ அவனது முதுகில் ஒரு அடி போட்டாள்

  

”இங்க எவ்ளோ கலவரம் நடக்குது உனக்கு இந்த நேரத்திலயும் ரொமான்ஸ் கேட்குதா சீக்கிரமா வண்டியை ஓட்டு அவன் வந்துடப்போறான்”

  

”லூசா இருக்கானே, அவன் பேய்தானே, எதுக்காக வண்டியை ஓட்டிக்கிட்டு வரனும் அப்படியே பறந்து வந்து  நம்மளை தடுக்க கூடாதா சே சினிமா கூட பார்த்ததில்லை போல”

  

”ஆமா அதுங்களுக்கு தெரியாததை நீ சொல்லி கொடுக்காத, வண்டியை வேகமா ஓட்டு” என அவள் கத்த கூடவே மற்ற நாச்சியா பேய்களும் கத்த அதில் அரண்டு வண்டியை அதிக வேகத்தில் ஓட்டினான் அகத்தியன்.

  

அசுர வேகத்தில் அனைவரும் அம்பேத்கர் நகருக்குள் நுழைந்தார்கள். நடுநிசி நேரம் அப்போதே இருள் சூழ்ந்துவிட்டது. அந்த ஊரே உறக்கத்தில் இருக்க மனித நடமாட்டமே தெருவில் இல்லை. ஊரே வெறிச்சோடி இருந்தது அதோடு வண்டியும் ஓடாமல் நி்ன்றுவிட அதிர்ந்தான் அகத்தியன்

  

”அகத்தியா என்னாச்சி“

  

“தெரியலை நாச்சியா வண்டி ஓட மாட்டேங்குது“

  

”இப்ப என்ன செய்றது”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.