“நேரா சொன்னா பவி அவ்வளவு ஈசியா ஓகே’ன்னு சொல்லி இருப்பாளா என்ன! உங்க கிட்ட எதுவும் சொல்லாம லெட்டரை மட்டும் கொடுத்தேனே, உங்களுக்கு நான் எதுக்கு அந்த லெட்டரை கொடுத்தேன்னு புரியுமான்னு எனக்கு சந்தேகமா இருந்தது...”
“நீ லோன் லெட்டரை தரவே, ஒருவேளை பணம் கொடுத்து உதவ சொல்றீயோன்னு முதல்ல நினைச்சேன்... ஆனால் பணம் தான் தேவைன்னா நீயே அதை செய்திருப்பீயேன்னு யோசிச்சேன்....”
“ஆமாம்... நான் தரணும்னு இல்லை... பவியோட நகையே போதுமே! அண்ணாக்கு தனியா கம்பெனி தொடங்க ரொம்ப ஆசை... ஆனால் பவி தான் குடும்ப சூழ்நிலை சொல்லி அவரை தடுத்து வச்சிருந்தா. அவளையும் தப்பு சொல்ல முடியாது... அண்ணா தனியா லோனுக்கு முயற்சி செய்துட்டே தான் இருந்தார்... கிடைச்சிருந்தாலும் கூட கட்டுப்படியாகும் வட்டி விகிதத்தில் இருந்திருக்குமான்னு சந்தேகம் தான்... பவிக்கு அதுல ரொம்ப வருத்தம் தெரியுமா?”
“ஏன்?”
“வேற என்ன, அண்ணாக்கு அது பிடிக்கும்னு அவளுக்கு தெரியும், ஆனாலும் அதை அவளால் சப்போர்ட் செய்ய முடியலையேன்னு தான்...”
“அது ஏன் அப்படி?”
“ம்ம்ம்... சின்ன பெட்டியை தூக்க கூட ஆள் தேடுற உங்களுக்கு எப்படி சார் இதெல்லாம் புரியும்...”
“ஹேய்...”
“சும்மா சொன்னேன்ங்க... மிடில் கிளாஸ் வாழ்க்கைங்குறது வேற மாதிரி ஆனந்த்... இந்த வீடு கட்டினதுக்கான கடனை இப்போ தான் அடைச்சாங்க... இனி நித்திலா இருக்கா, அம்மாவுடைய மெடிகல் எக்ஸ்பென்ஸ் இருக்கு... இன்னமும் எத்தனையோ... அண்ணா ஆரம்பிக்கும் பிஸ்னஸ்